விருத்தாசலம் கழக மாவட்டம் மங்களூர் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் பெரியார் பெருந் தொண்டர் தொண்டங்குறிச்சி மு.நடராசன் (83) அவர்கள் வயது மூப் பின் காரணமாக இன்று (28.8.2022) காலை 8 மணிக்கு மறைவுற்றார்.
கழகம் நடத்தும் அனைத்து கூட்டங்கள், போராட்டங்களில் தவறாது பங்கேற்றவர். ஓய்வூதியத்திலிருந்து வங்கிக்கடன் பெற்று பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கிய பெருமைக்குரியவர்.
அண்மையில் அரியலூரில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டு பேரணியில் பங்கேற்றார்.
மறைந்த சுயமரியாதைச் சுடரொளி மு.நடராசன் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும்.
விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் அய்யா அவர் களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:
Post a Comment