ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டி ஒன்றிய பாஜக அமைச்சருக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி
சென்னை,ஆக.29- ஒன்றிய அரசின் தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் கருத்தை தெளிவுற பிரதமர் மோடியிடம் அளித்துள்ளார். ஆனாலும், பொய்யையும் புனைசுருட்டையுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது பாஜக.
தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக எழுத்துப்பூர்வமான எந்த ஒரு கருத்தையும் தமிழ்நாடு சமர்ப்பிக்கவில்லை. இக்கல்விக்கொள்கையின் அம்சங்களை தமிழ்நாடு புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது என்று சென்னையில் செய்தியாளர்களிடையே ஒன்றிய கல்வித்துறை இணை யமைச்சர் சுபாஷ் சர்க்கார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பதிலடியாக, திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்
டி.ஆர்.பி.ராஜா தமிழ்நாடு சார்பில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் கருத்துகளை அச்சிட்டு அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடியிடம் அளித் துள்ளார். பிரதமர் மோடியிடம் அளிக்கப்பட்ட 17.6.2021 தேதியிட்டு அச்சிடப்பட்ட கருத்துருவின் படத்துடன் இணைத்து டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
முற்றிலும் தவறான செய்தி !!!
கடந்த 17.6.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிரதமரை நேரடியாக சந்தித்து தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக எதிர்த்து கடிதம் கொடுத்துள்ளார் ! இதோ அதற்கு சாட்சி ! தினந்தோறும் பொய்க் கதைகளை கூறுவதே பாஜக வின் வேலையாக உள்ளது !!!
-இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment