லக்னோ,ஆக.29- உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரும், ஒடுக்கப் பட்ட வகுப்பைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்சங்கர் கதேரி யாவை பூரி சங்கராச்சாரி ஜாதி ஆண வத்துடன் அவமதித்துள்ளார். பாஜக வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பின ருக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து அக் கட்சியின் பொறுப்பாளர்கள் எவரும் இதனை கண்டிக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் எத்வா தொகுதியின் நாடாளுமன்ற உறுப் பினராக இருப்பவர் ராம்சங்கர் கதேரியா. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாடா ளுமன்ற உறுப்பினராகவும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் வலம் வருபவர் ஆவார்.
ஒரு விழாவுக்கு அழைப்பதற்காக பூரி சங்கராச்சாரியாரிடம் ராம்சங்கர் கதேரியா சென்றார். அப்போது பழக் கூடை உள்ளிட்ட பொருள்களுடன் மரியாதை செலுத்திய அவர் சங்கராச் சாரியாருக்கு வணக்கம் செய்து அவரின் காலில் விழுந்து ‘ஆசி’ வாங்க முயன்றுள் ளார். அதுவரை அமைதியாக அமர்ந் திருந்த பூரி சங்கராச்சாரி தன்னுடைய காலை அவர் தொட்டுவிடக்கூடாது என்று தன்னுடைய கால்களை தூக்கிக் கொண்டார்.
இந்த படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. ராம்சங்கர் நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தாலும் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருப்பதால் பூரி சங்கராச்சாரி தன் கால்களை தொடக்கூட அவரை அனு மதிக்கவில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
இது குறித்து இணையவாசி ஒருவர் கூறுகையில், "தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராம்சங்கர் கத்தேரியா சங்கராச்சாரியின் பாதங்களைத் தொட்டால், சங்கராச்சாரி தூய்மையற்றவராகி விடுவார். நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தும் தரையில் அமர்ந்து இருக்கிறார்" என்று கூறி யுள்ளார்.
இது குறித்து விளக்கமளித்த ராம் சங்கர் "அப்படி ஒரு நிகழ்வு நடக்க வில்லை. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு, இதையெல்லாம் தவறாகக் காட்டும் இத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரு கிறேன்." என்று கூறியுள்ளார். ஆனாலும் இந்தப் புகைப்படம் உண்மையானது என பல்வேறு செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

No comments:
Post a Comment