வழக்குரைஞர் சித்தார்த்தன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை சந்தா ரூ.50,000 வழங்கினார். பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பாக வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து 2 ஆண்டு விடுதலை சந்தா ரூ.4000 வழங்கினார். உடன்: வழக்குரைஞர் பா.மணியம்மை. (19-08-2022, பெரியார் திடல்)
கடலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கடைவீதியில் சந்தா சேகரிப்பு
கடலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பண்ருட்டியில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் கடைவீதியில் விடுதலை சந்தா திரட்டும் பணியில் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கடைவீதியில் சந்தா சேகரிப்பு
கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கரூர் ஜவஹர் பஜார் கடைவீதியில் அறுபதாயிரம் சந்தா அளிப்பு விழாவுக்கு ஆதரவு தாரீர் என்று பொதுமக்களிடம் துண்டு வெளியீடு வழங்கி விடுதலைச் சந்தா வழங்குமாறு பொதுமக்களிடம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் குமாரசாமி மாவட்டத் துணைத் தலைவர் ராஜு நகரத் தலைவர் க நா சதாசிவம் கரூர் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி பெருமாள் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி 60ஆயிரம் சந்தாக்கள் திரட்டும் பணியின் இரண்டாம் கட்டமாக கடைவீதி தோறும் விடுதலைச் சந்தா திரட்டும் பணியில் மன்னார்குடி கழக மாவட்டத்தின் சார்பில் நீடாமங்கலம் நகர கடைவீதிகளில் மாவட்டத்தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையில், மாவட்டச்செயலாளர் கோ.கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பா,சிவஞானம் ,ஒன்றியச்செயலாளர் சு.சக்திவேல் மன்னை ஒன்றியத்தலைவர் மு.தமிழ்ச்செல்வன், மன்னை நகர இளைஞரணித்தலைவர் மா.மணிகண்டன், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட அமைப்பாளர் நா.இரவிச்சந்திரன், திராவிடர் கழக இளைஞரணி மாவட்டத்தலைவர் கா.இராஜேஷ்கண்ணன், நீடாமங்கலம் நகர இளைஞரணித்தலைவர் இரா.அய்யப்பன், பகுத்தறிவு ஆசிரியர் அணி மண்டல அமைப்பாளர் சி.ரமேஷ், பெரியார் படிப்பக பொறுப்பாளர் க.ஜீவானந்தம் ஆகியோருடன் சந்தா திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஓமலூரில் கடைவீதி விடுதலை சந்தா வசூலில் டாம் & ஜெர்ரி ரெடிமேட் கடை சவுந்திரராஜன், சீனிவாசா டிரைவிங் பள்ளி மாணிக்கம், ரெயின்போ லாரி உரிமையாளர் லியாகத் அலி ஆகியோர் அரையாண்டு சந்தா வழங்கினர் - கலந்து கொண்டோர் விவரம்: க.கிருட்டிணமூர்த்தி, எடப்பாடி கே.நா.பாலு, எடப்பாடி கோவி.அன்புமதி, சின்னப்பம்பட்டி உலக.கென்னடி, ஓமலூர் பெ.சவுந்திரராசன், தாத்தியம் பட்டி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மயிலாடுதுறை கடைவீதியில் 19.8.2022 அன்று மாலை விடுதலை சந்தா சேர்ப்பு பணி நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன் தலைமையில் செயலாளர் கி.தளபதிராஜ், துணைச்செயலாளர் அரங்க.நாகரத்தினம், நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் பூ.சி.காமராஜ், ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், கொள்ளிடம் ஓன்றிய தலைவர் பி.ஆர்.பாண்டியன், செயலாளர் பூ.பாண்டுரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர். தருமபுரி பூர்விகா மொபைல் விற்பனையகத்தில் பணியாற்றும் காசாளர் பெ.சந்திரன்,மா.முனியப்பன் கருநாடக மாநில திராவிட மாணவர் கழகத் தலைவர்,மா.செல்லதுரை மாநில இளைஞரணி துணை செயலாளரிடம் அரையாண்டு விடுதலை சந்தா ரூ.1000/- வழங்கினார். மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதியிடம் பாப்பிரட்டிப்பட்டி நகர திமுக துணை செயலாளர் ஜீவானந்தம் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி மற்றும் மாவட்ட ப.க.துணைத்தலைவர் தங்கராசு ஆகியோரிடம் ஆசிரியர் ராமதுரை -சோபனா இணையர் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினர். போக்குவரத்து துறை உதவியாளர் கோ. ராதாகிருஷ்ணன் விடுதலை சந்தா ஓராண்டு ரூ.2000 தருமபுரி மாவட்ட தலைவர் வீ. சிவாஜியிடம் வழங்கினார்.







No comments:
Post a Comment