தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தினால் வங்கிகள் மேலும் வளர்ச்சி அடையும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தினால் வங்கிகள் மேலும் வளர்ச்சி அடையும்

   நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து

 சென்னை, ஆக.31 வங்கிகள் தங்களது தொழில்நுட்ப வசதி களை மேம்படுத்த வேண்டும். இதன்மூலம், வங்கிகள் மேலும் வளர்ச்சி அடையும் என தமிழ் நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் வைர விழா கொண் டாட்டம் மற்றும் மூன்று ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெறும் 7-ஆவது மாநாடு சென்னையில்  நடைபெற்றது.

இந்தியன் வங்கியின் மேலாண் இயக்குநர் சாந்திலால் ஜெயின், மாநாட்டை தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘வங்கிகளை காப் போம், தேசத்தை காப்போம்’ என்ற முழக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறுகிறது. வங் கிகள் தனியார்மயமாக்கல் என்பது இன்றைக்கு ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. எனி னும், இந்தியாவில் இன்றைக்கு வங்கிகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. இந்தியன் வங்கி ரூ.10 லட்சம் கோடி பணப் பரிவர்த் தனைகளை மேற்கொண்டுள் ளது’’ என்றார்.

மாநாட்டில், தமிழ்நாடு நிதிய மைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தின ராக பங்கேற்றார். அவர் பேசிய தாவது: நாட்டில் அனைவரிடமும் பணப் பரிவர்த்தனை நடை பெறுவதற்கு வங்கிகள் மய்யமாக இருந்து செயல்படுகின்றன. இன்றைக்கு தொழில்நுட்பம் என் பது மிகவும்அத்தியாவசியமாக உள்ளது. எனவே, வங்கிகள் தங்களது தொழில்நுட்ப வசதி களை மேம்படுத்த வேண்டும். இதன்மூலம், வங்கிகள் மேலும் வளர்ச்சி அடையும். இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் வெள்ளி விழா மாநாட்டில் மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் பங்கேற் றார். வைர விழா கொண்டாட் டத்தில் நான் பங்கேற்கிறேன். இதன்மூலம், இச்சங்கத்துக்கும், திமுகவுக்கும் நெருங்கிய உறவு உள்ளது. இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசி னார்.

No comments:

Post a Comment