ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்வி: மக்கள் நலத் திட்டங்களை இலவசங்கள் என்று உச்சநீதிமன்றம் கோபப்படுகிறதே... தி.மு.க.வின் வழக்கு புரியவைக்குமா அவர்களுக்கு?

- செம்பை ராஜேஷ், திருநாகேசுவரம்

பதில்: அதன் காரணமாகத்தான் தமிழ்நாடு (தி.மு.க.) அரசு தன்னையும் இணைத்துக் கொள்ளவேண்டி மனு தாக்கல் செய்து உச்சநீதிமன்றத்தை ஏற்கச் செய்துள்ளது!

- - - - -

கேள்வி: பார்ப்பனர்கள் குற்றம் செய்யமாட்டார்கள். ஆகையால் பில்கிஸ்பானு குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிந்துரைத்தோம், இதே போல் ஜம்மு காஷ்மீர் ஆசிபா சிறுமி வழக்கில் குற்றவாளிகள் பார்ப்பனர்கள் தவறு செய்திருக்கமாட்டார்கள் என்று கூறினார்களே?

- வீர.செல்வன், திண்டுக்கல்



பதில்: எவ்வளவு அயோக்கியத்தனமான விளக்கம்!

பல ஆயிரம் கோடி ரூபாய் ‘சுவாகா செய்தது’ இமயமலைச் சாமியார் அருள் உபதேசப்படியே என்ற பங்கு சந்தை மோசடி சித்ரா இராமகிருஷ்ணன், சுப்ரமணியம் போன்றவர்கள் ‘‘சூத்திரர்களா? பஞ்சமர்களா? சண்டாளர்களா?’’ இல்லையே, முகத்தில் பிறந்த ஜாதிதானே!

காஞ்சிபுரம் கோவில் கருவறையை பள்ளியறை யாக்கிய தேவநாதன்கள் ‘பிராமணர்கள்’ இல்லையா. ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைந்து, பிறகு பிறழ் சாட்சியங்களால் விடுதலையான காஞ்சி ஜெயேந் திரரும், விஜயேந்திரரும் கீழ்ஜாதியா? இல்லையே - ‘மேல் மேல் டாப்’ ஜாதிதானே! வெட்கங்கெட்ட மூளிகளின் உளறல்கள்! 

- - - - -

கேள்வி: மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர பிற மாநில முதலமைச்சர்களின் ஆதரவு தேடினால் என்ன?

- அ. தமிழ்குமரன், ஈரோடு

பதில்: எல்லாம் ஒரே நாளில் நடத்திவிட முடியாது தோழரே, மனோ வேகம் இருந்தால் மட்டும் போதாது.

சுதந்திரமான - யாரிடமும் அடகு வைக்கப்படும் பொருளாக இல்லாத தலைமை யாரிடத்தில் இருக் கிறதோ அவர்கள் தலைமையில் செயல்பட்டால் விடிவு பெறும்; இன்றேல், வீழ்ச்சி தவிர்க்க இயலாதது. குரங்கு மத்தியஸ்தக் கதை நினைவுக்கு வருகிறதா?

- - - - -

கேள்வி: பெரியார் சிலை அவமதிப்புத் தொடர்ந்து கொண்டே இருக்கிறதே - என்ன தான் எதிர் வினை யாற்றுவது?

- ஆசைத்தம்பி, கோரைக் குழி

பதில்: செய்யட்டும், செய்யட்டும் - விளைவுகளே அதற்குத் தக்க எதிர்விளைவு வினைகள் - கவலைப் படாதீர்கள் தோழர்களே!

- - - - -

கேள்வி:  இந்தக் காலத்திலும் தேர்ந்தடுக்கப்பட்ட பட்டியல் இன ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆக. 15 அன்று கொடியேற்ற முடியாத சூழல் இருப்பது எதை உணர்த்துகிறது?

- இரவீந்தரன், ஊத்தங்கரை

பதில்: ஜாதி வெறியின் வேர்களை வெட்டினால் ஒழிய, இத்தகைய தடைகள் அகற்றப்படுவது எளிதான தல்ல! ஆனால், இறுதி வெற்றி பெரியாருக்கும், அம் பேத்கருக்கும்தான்!

- - - - -

கேள்வி: மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளுக்குக் கூட ஒன்றிய அரசு சட்டம் இயற்றுகிறதே-சட்டப்படி உச்சநீதிமன்றத்தை அணுக முடியாதா?

-கார்த்திகேயன், ஆண்டிமடம்

பதில்: அரசமைப்புச் சட்டத்தில் அதற்கு இடம் உண்டு என்பதால், இதற்குரிய பரிகாரம் - விடை மக்கள் மன்றத்திலிருந்து மட்டும் கிடைக்கும். நீதிமன்றங்களால் முடியாது!

- - - - -

கேள்வி: 2024இல் இந்த பாசிச ஆட்சியை வீழ்த்த முடியும் என்று நினைக்கிறீர்களா?

- த.மணிமேகலை, வீராபுரம்

பதில்: முடியாதது என்று இந்த உலகில் எதுவுமே இல்லை!

- - - - -

கேள்வி: 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் என்று கொக்கரித்தார்களே, இன்று 5ஜி ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போயிருக்கிறதே, இது எதைக் காட்டுகிறது?

- மா. சித்ராமுகில், தூத்துக்குடி

பதில்: ஒரு முழக் கயிறு பரிசளியுங்கள். அந்த கோயபல்சின் குருநாதர்களுக்கு, மானத்தையும், அறிவையும் அடகு வைத்த அடாவடி அரசியல் கழிசடைகள் பாடங் கற்பார்களாக!

‘‘ராசா கையை வைச்சார்; எனவே, அது ராங்கா போவதில்லை!’’

- - - - -

கேள்வி: பா.ஜ.க.வும், ஹிந்துத்துவக் கட்சிகளும் கடுமையாக தி.மு.க.வை எதிர்த்து நாளும் அவதூறு பரப்பிவரும் நிலையில் தி.மு.க., பா.ஜ.க.வுக்கு பணிந்து நடப்பதாக ஆதரவு சமூக ஊடகவியலாளர்கள் பலரே குற்றம் சாட்டுகிறார்களே - எது உண்மை?

- சசிக்குமார், பெரவள்ளூர்

பதில்: ஆதாரம் இல்லாதது. அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் ஈரோட்டில் முதலமைச்சர் கலை ஞர் முன்னால் ஓர் அறிவுரை கூறினார்.

“சபையில் ஆடும்போது முக்கிய பொருள் உள்ள பானை களை தலையில் வைத்து கவனமாக ஆடவேண்டும்.

வெறுந் தலையர்கள் எப்படி வேண்டுமானாலும் தலையை ஆட்டலாம். பொறுப்பு என்பது கவனத்தில் தான்!”

- அதை இப்போது நினைவூட்டுகிறோம். ஆட்சி யினரின் பொறுமை என்பது பலவீனமோ, பயமோ அல்ல!

- - - - -

கேள்வி: தமிழ்நாட்டில் சங்கிகள் இதுவரை செய்த கலவர முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தங்கள் முயற்சியை விடாது செய்கிறார்களே - இந்த ஆபத்தை எப்போது உணரப் போகிறோம்?

- வேல்முருகன், பொன்னேரி

பதில்: அதை நாள்தோறும் உணர்த்துவதற்காகவே 60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்கள். ‘‘வீடுதோறும், நாடு தோறும்‘‘ - புரிகிறதா?


No comments:

Post a Comment