ஒரே நாளில் மக்கள் நீதிமன்றம் மூலம் 81 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 16, 2022

ஒரே நாளில் மக்கள் நீதிமன்றம் மூலம் 81 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு

புதுடில்லி, ஆக. 16-  நாடு முழு வதும் உள்ள விசாரணை நீதிமன்றங்களில் மட்டும் இந்த ஆண்டு தொடக்கத் தில் 4.2 கோடி வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவற்றுக்கு விரைவாக தீர்வு காண்பதற்காக நீதி பதி யு.யு.லலித் தலைமையிலான தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (என்ஏஎல்எஸ்ஏ) சார்பில் இந்த ஆண்டில் இதுவரை 2 முறை மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப் பட்டது.

இந்நிலையில், டில்லி தவிர நாடு முழுவதும் 13.8.2022 அன்று 3-ஆவது முறையாக மக்கள் நீதி மன்றம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 81 லட்சம் வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட் டது. இந்த வழக்குகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.5,500 கோடி ஆகும்.

இதுகுறித்து என்ஏஎல் எஸ்ஏ தலைவரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதி பதியாக பொறுப்பேற்க உள்ளவருமான யு.யு.லலித் கூறும்போது, “நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண மக்கள் நீதிமன்றம் உறு துணையாக உள்ளது. இதன்மூலம் விளிம்பு நிலை யில் உள்ள மக்களுக்கு விரைவாக நீதி கிடைக் கிறது” என்றார்.

2-ஆவது மக்கள் நீதி மன்றம் மூலம் ரூ.9,422 கோடி மதிப்பிலான 95 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த ஆண்டில் நடை பெற்ற 3 மக்கள் நீதிமன் றங்கள் மூலம் மொத்தம் 2.2 கோடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ள தாக என்ஏஎல்எஸ்ஏ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment