40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு நிகழ்வு மாவட்ட தலைவர் புழல் த. ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. புழல் ஒன்றிய செயலாளர் உதயகுமார் பங்கேற்றார். வடகரை ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகிராமன் ஓராண்டு சந்தா வழங்கினார். பொன்னேரி நகர தலைவர் வே.அருள் மற்றும் இளைஞரணி அமைப்பாளர் க.சுகன்ராஜ், மற்றும் பொன்னேரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் வழக்குரைஞர் மூர்த்தி ஆகியோரிடம் .அமரகவி -வழக்குரைஞர் (ஓராண்டு), சுரேஷ் - வழக்குரைஞர் (ஓராண்டு) சந்தா வழங்கினர். கம்பத்தில் திமுக ஈ.தாமோதரன் ஓராண்டு விடுதலை சந்தாவை கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார்.

பாதுகாப்புத் துறை கணக்குப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெரியார் பற்றாளர் நடராஜன் விடுதலை சந்தாவை மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், அமைப்புச் செயலாளர் வே.செல்வம் ஆகியோரிடம் வழங்கினார். தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு சி.வெ.கணேசன் அவர்கள் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோரிடம் 'விடுதலை' நாளேட்டிற்கு 10 ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை வழங்கினார். விருதுநகர் மாவட்ட தி.மு.க துணைச்  செயலாளர் இராசாஅருள்மொழி 10ஆண்டு விடுதலை சந்தாக்களை விருதுநகர் மாவட்ட கழக தலைவர் இல.திருப்பதியிடம் வழங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி  வடக்கு மண்டல தலைவர் இ.ஜவகர் ‘விடுதலை‘ நாளிதழுக்கான சந்தாவினை  கழக குமரிமாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார். 

தி.மு.க ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியசெயலாளர் ஜெ.கார்த்திகேயன் 10 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.20,000அய் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மண்டலத் தலைவர் மு. அய்யனார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச்செயலாளர் அ.உத்திராபதி,தஞ்சைமாநகரத் தலைவர் ப. நரேந்திரன்,மாநகரச் செயலாளர் அ.டேவிட் ஆகியோரிடம் வழங்கினார் (04-08-2022)  தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் கேஸ்,கு.மணி மண்டல  கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வனிடம் ஒரு ஆண்டுக்கான விடுதலை சந்தா ரூபாய் 2000அய் வழங்கினார். மேனாள் மாணவர் கழக பொறுப்பாளர் த. யாழ்திலீபன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் இரா.வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.  தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் இரா.வினோத்,  மண்டல மேனாள் மாணவர் கழக பொறுப்பாளர்  த.யாழ் திலீபனிடம்  ஒரு ஆண்டுக்கான விடுதலை சந்தா ரூபாய் 2000அய் வழங்கினார். மண்டல கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன்,பேரூராட்சி மன்றத் தலைவர் கேஸ்.கு. மணி மற்றும் மன்ற உறுப்பினர் ஆகியோர் உடன் இருந்தனர். மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதியிடம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.

துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார் விடுதலை 10 ஆண்டு சந்தா ரூ20,000அய் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக தொழிலாளரணி மாநில செயலாளர் மு.சேகர், லால்குடி மாவட்டச் செயலாளர் அங்கமுத்து, பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டத் தலைவர் சண்முகம் ஆகியோரிடம் வழங்கினார் (04-08-2022)  தஞ்சை மண்டல செயலாளர் குருசாமி, பொதுக்குழு உறுப்பினர்  விஜயகுமார், மாவட்ட தலைவர் நிம்மதி,  திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன், ஒன்றிய பிரதிநிதி சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் அவர்கள் 10 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை வழங்கியதுடன் மேற்கொண்டு சந்தாக்கள் வழங்குவதாக கூறி ரசீது புத்தகங்களை பெற்றுக்கொண்டார்.  கோபி மாவட்டம் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் (திமுக) விடுதலை 25ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், கோபி மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் க.யோகானந்தம் ஆகியோரிடம் வழங்கினார் (05-08-2022)

காங்கிரஸ் கட்சி தஞ்சை மாநகர மாவட்டத் தலைவர் இராஜேந்திரன் 10 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.20,000அய் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மண்டலத் தலைவர் மு. அய்யனார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச்செயலாளர் அ.உத்திராபதி,தஞ்சைமாநகரத் தலைவர் ப.நரேந்திரன்,மாநகரச் செயலாளர் அ.டேவிட் ஆகியோரிடம் வழங்கினார் (04-08-2022). திருச்சி மண்டலத்தலைவர் ப.ஆல்பர்ட் 10 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக தொழிலாளரணி மாநில செயலாளர் மு.சேகர், லால்குடி மாவட்டச் செயலாளர் அங்கமுத்து ஆகியோரிடம் வழங்கினார் (4.8.2022).  





No comments:

Post a Comment