இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,256 பேர் கரோனாவால் பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,256 பேர் கரோனாவால் பாதிப்பு

புதுடில்லி, ஆக.27 இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 10,256 பேர் கரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 13, 528 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.ஒன்றிய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கரோனா பாதிப்புகள் குறித்த தகவல்களை வெளி யிட்டு உள்ளது.

அதன்படி கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,256 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,89,176ஆக உயர்ந்தது.

நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர் களில் 90,707 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.20% ஆக குறைந் துள்ளது.

சிகிச்சை பலனின்றி நேற்று (26.8.2022) மேலும் 68 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம்  நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,556ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக  உள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் 13,528பேர் குணமடைந் துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண் ணிக்கை 4,37,70,913ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.61% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 2,11,13,94,639 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும்  31,60,292  பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்...

தமிழ்நாட்டில்  கடந்த சில வாரங்களாக கரோனா குறையத்தொடங்கியுள்ளது.    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழ்நாட்டில் மேலும் 539 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 66 ஆயிரத்து 101 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவில் இருந்து நேற்று (26.8.2022)  குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 628 ஆக உள்ளது. இதுவரை 35 லட்சத்து 22 ஆயிரத்து 660 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா பாதிப்பால்உயிரிழப்பு இல்லை.தமிழ்நாடு முழுவதும் 5,407 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் 90 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment