விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை: ரூ.1.07 கோடி அபராதம் வசூல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை: ரூ.1.07 கோடி அபராதம் வசூல்

சென்னை, ஆக. 17- பதிவெண் பலகையின் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப் படுகிறது என போக்குவ ரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர் பாக போக்குவரத்து காவல் துறை கூறியிருப்பதாவது:

சட்ட விதிகளுக்கு புறம்பாகப் பதிவெண் பலகைகளை பொருத்தி யுள்ள வாகனங்கள் மற் றும் மடிக்கும் வகையி லான பதிவெண் பலகை களை பொருத்தியுள்ள வாகனங்களுக்கு எதிராக சென்னை போக்குவரத்து காவல் துறையினர் சிறப்பு தணிக்கைகள் செய்து தொடர்ந்து தீவிர நடவ டிக்கைகள் எடுத்து வரு கின்றனர்.

பதிவெண் பலகைக ளின் விதிமீறல்கள் தொடர் பாக தினந்தோறும் சுமார் 200 வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டு போக்குவரத்து காவல் துறையினரால் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 நாட்களில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து அபராதம் வசூலிக்கப் பட்டு நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை போக்குவரத்து காவல் துறையினர் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை சட்ட விதிகளுக்கு புறம்பாக பதிவெண் பல கைகள் பொருத்திய வாகன ஓட்டிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு சிறப்பு சோதனைகள் மூலம்,1 லட்சத்து 7 ஆயிரத்து 891 வழக்குகள் பதிவு செய்து, ரூ.1,07,78,100 அபராதம் வசூலித்துள்ளனர். இது போன்ற சிறப்பு தணிக் கைகள் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு சட்டப் படி நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment