பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வருக்கு மாநில அளவிலான சிறந்த மருந்தாளுநர் விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வருக்கு மாநில அளவிலான சிறந்த மருந்தாளுநர் விருது

திருச்சி, ஆக. 17- தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந் தாளுநர் நல கூட்டமைப்பு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் மருந்தாளுநர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியினை 14.08.2022 அன்று மாலை 4 மணியளவில் திருச்சி சங்கீதாஸ் ஹோட் டலில் நடைபெற்றது.

இதில் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்க ளுக்கு மருந்தியல் துறையில் ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து 34 ஆண்டு கள் கல்வி மற்றும் ஆராய்ச் சிப் பணியில் சிறப்பாக செயல்பட்டமையை பாராட்டி மாநில அள விலான சிறந்த மருந்தாளுநர் விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது. தமிழ் நாடு மருந்தியல் கழகத் தின் பதிவாளர் முனைவர் மு. தமிழ்மொழி, மேனாள் மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநர்  இரவிக்குமார், சென்னை வேல்ஸ் அறிவியல் மற் றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன பேராசிரியர் முனைவர் மலர்க்கொடி வேல்ராஜ் மற்றும் தமிழ் நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர் நல கூட்ட மைப்பின் தலைவர் கார்த் திக் ஆகியோர் முன்னி லையில் கந்தர்வக்கோட்டை கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை அவர்கள் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர் களுக்கு சிறந்த மருந்தா ளுநர் விருதினை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மருந்தி யல் தேர்வில் அதிக மதிப் பெண் பெற்ற பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதுநிலை மருந்தியல் மாணவிகள் ஆர். சுகந்தி, என். பவித்ரா, இளநிலை மருந்தியல் மாணவிகள் கே. ருவைத்தா ஆஃப்ரின், கே. பிரியதர்ஷினி, பி. விநோதினி, மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவி கள் ஜா. நூருல் ஜாஸ்மின், எஸ். சுஜித்ரா உள்பட 7 மாணவிகளுக்கு சிறந்த மாணவர் விருது வழங்கப்பட்டுள்ளது.

மருந்தியல் துறையில் சிறந்து விளங்கும் கல்வி யாளர்கள், ஆராய்ச்சியா ளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், மருந்து உற்பத்தியாளர்கள், சந் தைப்படுத்துனர், மருத் துவமனை மற்றும் மருந் தகங்களில் பணியாற்றும் மருந்தாளுநர்கள், மருந் தியல் மாணவர்கள் என அனைத்து மருந்தாளு நர்களையும் கவுரவிக்கும் விதமாக இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment