மூடநம்பிக்கையால் ஏற்பட்ட பலி திவசம் கொடுக்கப் போனவர்களுக்கு திவசம் கொடுக்கப் போகிறார்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

மூடநம்பிக்கையால் ஏற்பட்ட பலி திவசம் கொடுக்கப் போனவர்களுக்கு திவசம் கொடுக்கப் போகிறார்கள்!

ராஜேந்திர நகர், ஆக. 17- பீகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள கந்தப்பாகாட் கிராமத்தைச் சேர்ந்த அசுரபி சாகு என்பவரின் தாயார் 11.8.2022 அன்று உயிரிழந்தார். தாயா ருக்கு திவசம் மேற்கொள்ள தனது குடும்பத்தினர் பலரை அசுரபி சாகு ஜார்ஹி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  ஆற்றில் தண்ணீர் அதிகம் சென்றுகொண்டு இருந்தது, 

 இந்த நிலையில் திவசம் செய்த பார்ப்பனர் அவர்கள் குடும்பத்தார் அனைவரையும் ஆற்றில் இறங்கக் கூறினார். தண்ணீர் அதிகம் ஓடியதால் கரையிலேயே நின்று தலையில் தண்ணீர் தெளித்தனர். ஆனால் அர்ச்சகர் அனைவருமே ஆற்றில் இறங்கித் தலைமுழுகவேண்டும் அப்படிச் செய்தால் தான் திவசத்தின் பலன் உங்கள் அம்மாவிற்குச் சென்று சேரும் என்று கூறினார். 

இதனை அடுத்து அனைவருமே கைகளைப் பிடித்துக் கொண்டு ஆற்றில் இறங்கினர். முன்னால் சென்ற இருவர் ஆழமான பகுதியில் இருந்த சுழலில் சிக்கினர். அனை வருமே ஒருவரை ஒருவர் பிடித்திருந்ததால் வெள்ள ஓட்டம் அனைவருமே ஆழமான பகுதியில் இழுத்து விட்டது, இதனால் அனைவருமே சுழலில் சிக்கி ஆற்றில் மூழ்கியுள்ளனர். அவர்களை ஆற்று வெள்ளம் இழுத்துச் செல்வதைப் பார்த்ததும் அவர்களுக்குப் பூஜை செய்த பார்ப்பனர் அந்த இடத்தில் இருந்து பொருட்களை எடுத்து கொண்டு ஓடிவிட்டார்

இந்த அய்ந்து பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் கள்.தொடர்ந்து, ஆற்றில் நீச்சல் தெரிந்த உள்ளூர்வாசிகளின் உதவியோடு உயிரிழந்த அய்ந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அவர்களின் உடலை உடற்கூராய்வுக்காக காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அஜய் சாஹ் (24), விஜய் (22), விஷால் (16), ரிதேஷ் (34), விகாஸ் குமார் (20) ஆகியோர் இந்நிகழ்வில் உயிரிழந் திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆற்றில் இரங்கச் சொன்னவர் மீது நடவடிக்கை உண்டா?


No comments:

Post a Comment