கந்தர்வக்கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் பெரியார்-1000 வினா-விடைப் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

கந்தர்வக்கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் பெரியார்-1000 வினா-விடைப் போட்டி

கந்தர்வகோட்டை, ஆக. 25- கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச் சிப்பட்டியில்  பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டி நடை பெற்றது.

இப் போட்டித்தேர்வினை வட் டாரக் கல்வி அலுவலர் வெங்க டேஸ்வரி  தொடங்கி பேசியதாவது மாணவர்கள் அனைத்து தேர்வி களிலும் கலந்து கொள்ள வேண் டும், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கம் வர லாற்றை இத்தேர்வின் மூலம் தெரிந்து கொள்ளலாம், நிறைய  புத்தகங்களை வாசிக்க வேண்டும் என மாண வர்களுக்கு அறிவுரை கூறினார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக தலைமை ஆசிரியர் க.தமிழ்செல்வி செயல்பட்டார்.

தேர்வு மய்ய கண்காணிப்பாள ராக ஆசிரியர்கள் க‌.மணிமேகலை, பா.ஆனந்தராஜ்  செயல்பட்டனர்.

தேர்வு மய்ய ஒருங்கிணைப்பா ளராக அ.ரகமதுல்லா செயல்பட் டார்.தேர்வினை அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் மா.சின்ன ராஜா பார்வையிட்டார்.

இப்போட்டியினை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் பள்ளி மாணவர்களுக்காக பெரியார் 1000 என்னும் மாபெரும் வினா-விடைப் போட்டிகளை கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருகிறது. 6முதல் 12 வகுப்பு வரை உள்ள  மாணவ,மாணவியர்களுக்கு நடத்தப்படுகிறது.

 கடந்த ஆண்டு மூன்று லட்சம் பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனுற்றனர். ஒவ்வொரு பள்ளி யிலும் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ மாணவியருக்கு  தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 சமூக நீதி நாள் அன்று  பிறந்த நாள் விழாவில் பரிசு வழங்கப்படுகிறது. வினா  விடைப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர் களுக்கும் சான்றிதழ் வழங்கப்படு கிறது. இப்போட்டி தேர்வில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற முதல் மூன்று போட்டியாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்படும். இத்தேர்வின் மூலம் மாணவர்கள்  பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள் ளும் வகையிலும், மாணவர்களின் அறிவியல், சமூகவியல், சிந்தனை கள் வளர்க்கும் வகையிலும், பகுத் தறிவு, மூடநம்பிக்கை, தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், தமிழ் நாட்டின் ரட்சகர், பெரியார் சுற்றுப்பயணம் செய்த நாள் பற்றிய வினாக்களும் இடம் பெற்றன.

இத்தேர்விற்கான ஏற்பாடு களை பள்ளி ஆசிரியர்கள் நிவின், வெள்ளைச்சாமி,செல்வி ஜாய் ஆகியோர் செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment