குமரியில் ஒரே நாளில் ஆறு பள்ளிகளில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

குமரியில் ஒரே நாளில் ஆறு பள்ளிகளில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டி

குமரி, ஆக. 25- குமரியில் ஒரே நாளில் 6  பள்ளிகளில்  பெரியார் 1000 வினா விடைப் போட்டி எழுச்சி யுடன் நடந்தது. 

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் நாகர்கோவில்  புனித பிரான்சிஸ் மேல் நிலைப் பள்ளி, எஸ். எல். பி. அரசு மேல் நிலைப் பள்ளி, கண்கார்டியா உயர்நிலைப் பள்ளி,அய்.இ. எல்.சி. பப்ளிக் பள்ளி, சிறீநாராயண குரு மேல் நிலைப்பள்ளி,இரட்சணிய சேனை மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 பள்ளி களில் பெரியார் மணியம்மை பல் கலைக் கழகம் சார்பாக  பெரியார் ஆயிரம் வினா விடைப்  போட்டி  சிறப்பாக நடந்தது. மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். ஒவ்வொரு பள்ளிகளிலும் ஒவ் வொருவராக மாவட்ட  தலை வர் மா.மு சுப்பிரமணியம்  மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன், மாவட்ட துணைத்தலைவர் 

ச.நல்லபெருமாள், பொதுக்குழு உறுப்பினர். ம.தயாளன் வழக்குரை ஞர் அப்பாஜி ஆகியோர் போட்டியினை தொடங்கி வைத்தனர். தலைமை ஆசிரியர்கள் சகோதரி இராணி, எஸ்.  ஜான்சன் பள்ளி தமிழ்ஆசிரியர்கள் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்.இளைஞரணி தலைவர் இரா. இராஜேஷ் தோழர்கள்  குமரிச் செல்வன், ச.ச. மணிமேகலை ஆகி யோர் பங்கேற்றனர், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக பேராசிரி யர் செல்வகுமார் போட்டியினை ஒருங்கிணைத்தார்,  பள்ளி தலைமை ஆசிரியர்கள் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


No comments:

Post a Comment