நெல்லை, ஆக. 25- தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாளை முன் னிட்டு பெரியாருடைய கருத்து களை மாணவர்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் பெரியார் சிந்தனை உயராய்வு மய் யம் இணைந்து நடத்திய மாணவ மாணவியர்க்கான பெரியார் 1000 வினா-விடைப் போட்டி திருநெல் வேலியில் 23.08.2022 அன்று சிறப் பாக நடந்தது.
வரலாற்று சிறப்புமிக்க சேரன் மகாதேவி அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்ற வினா-விடை போட்டியை பள்ளி யின் தலைமையாசிரியர் இரா.மரகதவல்லி துவங்கி வைத்தார். பள்ளி மாணவிகளை போட்டிக்கு தயார் செய்யும் பொறுப்பை கவன மாகவும் கூடுதல் சிரத்தையுடனும் மேற்கொண்ட தமிழாசிரியர்கள்
து.மெர்சி பாய் பியூலா மற்றும்
த.செல்வி ஆகியோர் பணி சிறப்பா கவும், போற்றத்தக்கதாகவும் அமைந் திருந்தது.
திருநெல்வேலி நகர் லிட்டில் ஃப்ளவர் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநிலப் பொறுப்பாளர் பேராசிரியர் பாபு துவங்கி வைத்தார். நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர் மாலையப்பன் கலந்து கொண்டு தேர்வுகள் சிறப்புடன் நடைபெற உதவிகள் செய்தனர்.
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்ற பெருமை மிக்க கல்வி நகர மாம் பாளையங்கோட்டை கிறிஸ் துராஜா மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை திருநெல் வேலி மத்திய மாவட்டத் தி.மு.க. பொருளாளரும் சீர்மிகு திராவிட இயக்கச் சிந்தனையாளருமாகிய வண்ணை இரா.சேகர் அவர்கள் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரி யர், ஆசிரியர் வில்சன் மற்றும் ஆசிரியர்கள் தேர்வை சிறப்புடன் நடத்தி சிறக்கச் செய்தனர். பாளை யங்கோட்டை தூய யோவான் மேல் நிலைப் பள்ளியில் நடை பெற்றத் தேர்வை மாவட்டப் ப.க. செயற்குழு உறுப்பினரும் வழக்கு ரைஞருமான சங்கரராசு துவங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் மற் றும் ஆசிரியர்கள் தேர்வுகள் சிறப் புடன் நடைபெற பேருதவியாக இருந்தனர். நிகழ்ச்சிகளில் மாவட்டத் தலைவர் இரா.காசி, மாவட்டச் செயலாளர் இரா.வேல் முருகன், துணைத் தலைவர்
ச.இராசேந்திரன், மாவட்டப் ப.க. துணைத் தலைவர் சு.நயினார் சேரன்மகாதேவி ஒன்றிய. கழக தலைவர் காருகுறிச்சி செல்வ சுந்தர சேகர், வீரை. பெரியார் பித்தன்,ரவி,சிவராஜ் மற்றும் பெரியார் மணியம்மை தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த திரு.வசந்த வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment