மதுரை மாவட்டம்
மதுரை சிஇஓஏ கோசாகுளம், புனித அந்தோணியார் பள்ளியில் பெரியார்-1000 தேர்வைத் தொடங்கி வைத்தார் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர்.வா.நேரு. .உடன்: அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மதுரை மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், .துணைச்செயலாளர் இரா.லீ.சுரேசு. மதுரை சிஇஓஏ பள்ளியில் பெரியார் ஆயிரம் தேர்வில் 88 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம் மாவட்டம்
மேட்டுப்பாளையம் மாவட்டம் காரமடை, புஜங்னூர், தோலம்பாளையம், மற்றும் வெள்ளியங்காடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை தருமன்.வீரமணி (மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) மற்றும் திமுக தோழர் டி. உத்திரநாதன் ஆகியோர் சந்தித்து பெரியார் - 1000 வினா-விடை புத்தகங்களை வழங்கினர்.
ஒசூர் மாவட்டம்
ஒசூரில் பெரியார்-1000 வினா-விடை தேர்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள்.
திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம் சார்பில் பெரியார்-1000 வினா-விடை தேர்வு பெரிச்சிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
காரைக்குடி மாவட்டம்
காரைக்குடி கழக மாவட்டத்தில் 22.08.2022 அன்று நடைபெற்ற பெரியார்-1000 வினா -விடை தேர்வு
1. சிறீ மீனாட்சி பெண்கள் மேனிலைப் பள்ளி காரைக்குடி, 2. அரசு மேனிலைப் பள்ளி,அரியக்குடி, 3. முருகானந்தா நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை, 4. அழகப்பா மெட்ரிக் பள்ளி,காரைக்குடி, 5. எல்எஃப்ஆர்சி மேனிலைப் பள்ளி, காரைக்குடி
தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப்பள்ளியில் 20-08-2022 அன்று பெரியார் 1000 வினா-விடைப் போட்டி தேர்வினை கீழப்பாவூர் தேர்வுநிலைப் பேரூராட்சி மன்றத் தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தொடங்கி வைத்தார் உடன்: மேனாள் பேரூராட்சி மன்றதலைவர் பொன். அறிவழகன், கீழப்பாவூர் நகர செயலாளர் இரா.ஜெகதீசன், கவுன்சிலர் ராஜன்விஜி, மாரியப்பன், குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பெற்ற மாணவி கோமதி, பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைகழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மனோகரன், அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப்பள்ளி தாளாளர் சோனியா, ஆசிரியர் அகிலா, லதா மற்றும் தென்காசி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் த.வீரன்.






No comments:
Post a Comment