உடலுக்கு நலம் தரும் வால்நட், பேரீச்சம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

உடலுக்கு நலம் தரும் வால்நட், பேரீச்சம்

வால்நட்

*இதில் ஒமேகா 3  நிறைந்துள்ளதால், ஆன்டி-இன்ஃப்ளமேட்டரியாக செயல்படும். ஆஸ்துமா, ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ், எக்ஸிமா, சொரியாசிஸ் பிரச்னைகளைக் கட்டுப்படுத்த உதவும்.

*டைப் 2 டயாபடீஸ் உள்ளவர்களுக்கு ஏற்றது. தினமும் கால் கப் என தொடர்ந்து மூன்று மாதங்கள் உண்டுவர, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

*ஒமேகா 3 உள்ளதால் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

*இதில், மெலடோனின் இருப்பதால் ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

*சீரான இதயத்துடிப்புக்கு உதவும்.

*எல் ஆர்ஜினின் என்ற கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளதால், ரத்தக் குழாய்களின் விரிவடையும் தன்மையை மேம்படுத்துகிறது. ரத்தக் குழாய்கள் ஆரோக்கியமாவதால், முதுமை அடைவது தாமதமாகிறது.

*ஏ.எல்.ஏ (Alpha-linolenic acid) நிறைந்துள்ளதால், திடீர் இதயத் துடிப்பு முடக்கம் எனப்படும் சடர்ன் கார்டியக் அரெஸ்ட் ஏற்படாமல் காக்கும்.

*வைட்டமின் பி, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், மாங்கனீசு நிறைந்துள்ளன.

 *மார்பகம் மற்றும் பிராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும்.

பேரீச்சம் பழம்

*தினமும் 10 பேரீச்சம்பழங்களை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் குடித்துவந்தால் மலச்சிக்கல் பிரச்னை தீரும்.

*உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழித்து, நல்ல பாக்டீரியாவை மேம்படுத்தும்.

*எடை அதிகரிக்க விரும்புவோருக்கு ஏற்றது. ஒரு பேரீச்சம் பழத்தில் 20 கலோரி உள்ளது.

*ஒரு கை நிறைய பேரீச்சம் பழத்தை முதல் நாள் தேனில் ஊறவைத்து மறுநாள் சாப்பிட, காம சக்தியை (செக்ஸுவல் ஸ்டாமினா)  நீட்டிக்க உதவும்.

*பொட்டாசியம் நிறைந்திருப்பதால், வயிற்றுக்கடுப்புக்கு நல்லது.


No comments:

Post a Comment