இலங்கையில் என்னதான் நடக்கிறது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

இலங்கையில் என்னதான் நடக்கிறது?

அதிபர் மாளிகையில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுப்பு

கொழும்பு, ஜூலை12 இலங்கையில் நீடித்துவரும் வரலாறு காணாத பொரு ளாதார நெருக்கடி தீர இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை கூட ஆகலாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அண்மையில் தெரிவித்திருந்தார். இதனால் ஏமாற்ற மடைந்த இலங்கை மக்கள் சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் போராட் டத்தில் குதித்தனர். அதிபர் கோத்த பய ராஜ பக்சேவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயும பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தின் உச்ச கட்டமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாக திரண்டு அதிபர் மாளி கையை  அதிரடியாக முற்றுகையிட்டனர். இதன் விளைவாக வேறு வழியின்றி தப்பித்தோம், பிழைத்தோம் என்று அதிபர் கோத்தபய வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 

ரணில் விக்ரமசிங்கேவும் பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.இந்த நிலையில், கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள அதிபர் மாளிகையை போராட்ட காரர்கள் முற்றுகையிட்டு, சூறையாடினர். அப் போது அதிபர் மாளிகையின் ரகசிய அறைக்குள் இருக்கும் அலமாரியில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு போராட்டக் காரர்கள் அதிர்ச்சி அடைந் தனர். 

இந்திய மதிப்பில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அந்த பணம் இலங்கை ரூபா மதிப்பில் 17 மில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. 

அவ்வளவு பெரிய தொகையை போராட்டக்காரர்கள் நேர்மையாக அதிபர் மாளிகை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

எந்த நோக்கத்திற்காக அங்கு பணம் வைக்கப் பட்டது என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், அதிபர் மாளிகைக்குள் கோடிக் கணக்கான ரூபாய் பதுக்கி வைக்கப் பட்டிருந்ததாக வெளியான தகவலால், ஆட்சியாளர்கள் மீதான இலங்கை மக்களின் கோபம் மேலும் அதிகரித்துள்ளது.

இடுக்கண் வருங்கால் நகுக -வள்ளுவரின் சொல்லை செயலில் 
காட்டிய இலங்கைத்தமிழ் இளைஞர்

 எனது அலைபேசிக்கு சார்ஜ் இல்லை சார்ஜர் எங்கிருக்கிறது என்று இலங்கை அதிபரின் அதிகாரப்பூர்வ சமூகவலை தளத்தில் அதிபர் மாளிகையின் படுக்கை அறையில் இருந்து அதிபருக்கு கோரிக்கை விடுத்த இலங்கை தமிழ் இளைஞரின் பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. நாடேபெரும் இன்னலைச்சந்தித்துக் கொண்டு இருக்கும் போது தமிழ் இளை ஞரின் இந்த செயல் வள்ளுவரின் இடுக்கண் வருங்கால் நகுக என்பதற்கு எடுத்துக் காட்டாக இருப்ப தாக தமிழார்வலர்கள் கூறிவருகின்றனர்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை ஆளும் தார்மீக பொறுப்பை இழந்த நிலையில் பதவி விலக 13ஆம் தேதி வரை அவகாசம் கேட்டு தலைமறைவாக உள்ளார். தவிர மூன்று நாட்களாக அவர் யாருடைய கண்ணுக்கும் புலப்படாமல் ஆட்சி செய்து வருவது உலக அரசியலில் இல்லாத விந்தையாக உள்ளது

அதேவேளையில், அதிபர் மாளிகைக் குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அவரது கட்டிலில் படுத்து உருண்டு மகிழ்ந்ததுடன் அங்குள்ள நீச்சல் குளத்தை பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றி  குடும்பத்தோடு வந்து குளித்து சமைத்து  உண்டுவருகின்றனர். அதில்  தமிழ் இளைஞர் ஒருவர் அதிபர் மாளிகையில்   தனது அலைபேசிக்கு  ஏற்றாற்போல் சின்ன பின் சார்ஜர் கிடைக்காததால் அதிபரின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கத்தை தொடர்பு கொண்டு  இங்கே எனக்கான அலைபேசி சார்ஜர் ஏதும் இருக்கிறதா” என்று விசாரித்து தகவல் அனுப்பி இருக்கிறார்.

அதற்கு எங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி -_ உங்கள் பெயர் முகவரி அனுப்புங்கள் என்ற  தகவல் பதிலாக வந்ததுள்ளது.

பொருளாதார நெருக்கடியிலும், பொது மக்கள் அதிபர் மாளிகைக்குள்  நுழைந்து இவ்வாறான நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்க -_ அதிபர் கோத்தபாயா ராஜ பக்சேவோ எங்கோ ஒளிந்துகொண்டு தனது பதவிக்காலத்தை நீடித்து வருகிறார்.தற்போது எங்கு இருக்கிறார் என்பது அந்த நாட்டு ராணுவத்திற்கே தெரியாமல் உள்ளதாம்.

இலங்கையில் அமைதி திரும்ப இராணுவம் களம் இறங்கியது-வன்முறையாளர்கள் சிலர் கைது

 தலைநகர் கொழும் புவில் ஏற்பட்டுள்ள வன்முறையை கட் டுக்குள் கொண்டுவர இலங்கை ராணுவம் களம் இறங்கியது. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு சொந்தமான வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில்  நடைபெற்றுவரும் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அதிபர் ராஜபக்சே தலைமறைவானார், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே பதவிவிலகினார். அதிபர் பதவியில் இருந்து விலக கோத்தபய ராஜபக்சே அவகாசம் கேட் டிருப்பதாக அவைத் தலைவர் தெரிவித்துள்ளார். அவருடன் பேசியதாக தெரிவித்த பேரவைத் தலைவர் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலை வெளியிடவில்லை.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் நிச்சய மற்ற நிலையில் உள்ள நேரத்தில் கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியிலிருந்து நாளை 13ஆம் தேதி பதவி விலக உள்ளதாக இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவர் கூறியுள்ளார்

அதே வேளையில், அதிபர் மாளிகை மற்றும் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான டெம்பிள் ட்ரீ ஆகியவற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புகுந்ததால் அங்கு குவிந்த கழிவுகளை போராட்டக் காரர்கள்  அகற்றி வருகின்றனர்.

கொழும்பு நகரில் ஓரளவு அமைதி திரும்பியுள்ள நிலையில், ராணுவத்தினர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று இலங்கை ராணுவ தலைமை தளபதி ஷவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத் துள்ளார்.

No comments:

Post a Comment