மதுரை எய்ம்சில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

மதுரை எய்ம்சில் காலிப் பணியிடங்கள்

ஜிப்மர், புதுச்சேரி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வழிகாட்டி நிறுவனமாக நியமிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நிறுவப்பட்ட உச்ச சுகாதார நிறுவனமான மதுரை, தமிழ்நாடு, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS)இருந்து வழக்கமான அடிப்படையில் பல்வேறு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்தியர்களிடமிருந்து இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

எனவே தகுதியானவர்கள் 18.07.2022க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

Professor 20

Additional Professor 17

Associate Professor 20

Assistant Professor 37

மொத்தம் 94 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் Post Graduation, MD/ MS, M.H.A (Masters in Hospital Administration), Ph.D,  முடித்திருக்க வேண்டும்.

பணிக்கான வயது விவரங்கள்:  Professor மற்றும் Additional Professor பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும்.

Associate மற்றும் Assistant Professor பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

பின்வருமாறு விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

UR/ OBC/ EWSவிண்ணப்பதாரர்கள்: ரூ. 1,500/-

SC/ST விண்ணப்பதாரர்கள்: ரூ. 1,200/-

PWD விண்ணப்பதாரர்கள்: கட்டணம் கிடையாது

ஊதிய விவரம்:

பேராசிரியர் ரூ. 1,68,900 - 2,20,400/-

கூடுதல் பேராசிரியர் ரூ. 1,48,200 - 2,11,400/-

இணைப் பேராசிரியர் ரூ. 1,38,300 - 2,09,200/-

உதவிப் பேராசிரியர் ரூ. 1,01,500 - 1,67,400/-

தேர்வு செயல் முறை: ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கண்ட கல்வி தகுதியும், வயது வரம்பும் உடைய விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: கீழே வழங்கப்பட்டுள்ள  இணைய முகவரிக்கு சென்று விண்ணப்பதார்கள்  18.07.2022  மாலை 04.30 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு:  https://jipmer.edu.in/announcement/recruitment-faculty-posts-various-departments-regular-basis-aiims-madurai



No comments:

Post a Comment