பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு அரசுப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு அரசுப் பணியிடங்கள்

பாபா அணு ஆராய்ச்சி மய்யத்தின் கீழ் செயல்படும் அணுசக்தி மறுசுழற்சி வாரியத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: ஸ்டெனோகிராபர் 6, ஓட்டுநர் 11, வொர்க் அசிஸ்டென்ட் 72 என மொத்தம் 89 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: வொர்க் அசிஸ்டென்ட் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு பத்தாம் வகுப்புடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்துக்கு 80 ஆங்கில வார்த்தைகளும், நிமிடத்துக்கு 30 ஆங்கில வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது : 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

பணியிடம் : கல்பாக்கம், தாராபூர், மும்பை.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, தட்டச்சு தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 30.7.2022

விவரங்களுக்கு : https://recruit.barc.gov.in

No comments:

Post a Comment