விவசாயப் பணிகளுக்கான வாகனங்கள் தேவை அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

விவசாயப் பணிகளுக்கான வாகனங்கள் தேவை அதிகரிப்பு

சென்னை, ஜூலை 9 இந்தியாவின் வேளாண் வளர்ச்சி பயன்பாட்டிற்கான  டிராக்டர் உற்பத்தி நிறுவனமான சோனாலிகா, சந்தையின் போக்குகளை மிக துல்லியமாகக் கணித்து அதற்கேற்ப ஹெவி-டூட்டி பிரிவில் தெளிவான இலக்குகளோடு பிராந்திய வாடிக்கையாளர்களின் தேவைக்கான வாகன தயாரிப்புகளை அளித்து வருகிறது

நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்து வருவதால், சோனாலிகா டிராக்டர்ஸ், விவசாயிகளின் அன்றாட விவசாயப் பணிகளில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாகக் கடந்து வர இந்த வாகனங்கள் உதவியாக விளங்குகிறது.

இது குறித்து நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர்  ரமன் மிட்டல்  கூறுகையில், “விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் அவர்களிடம் நம்பிக்கையூட்டும் விதமாக புதிய இலக்குகளில் அதாவது தயாரிப்பு மற்றும் செயல்பாடுகளில் சிறப்பாக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முதல் காலாண்டில் ஒட்டுமொத்தமாக மிக அதிகபட்சமாக 39,724 டிராக்டர்கள் விற்பனை செய்து 18% வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.  இந்நிறுவனம் தொடர்ந்து பிராந்திய விவசாயிகளின் தேவைகளுக்கேற்ப தயாரிப்புகளை அளித்து அதிக விளைச்சல் மூலம் அதிக வருமானத்தை வரும் காலங்களில் ஈட்ட உதவும்,’’ என்று கூறினார்.


No comments:

Post a Comment