தமிழ்நாட்டில் 2,722 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

தமிழ்நாட்டில் 2,722 பேருக்கு கரோனா

சென்னை, ஜூலை 9 - தமிழ்நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

தமிழ்நாட்டில் நேற்று (8.7.2022) புதிதாக 1,495 ஆண்கள், 1,227 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 722 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 939 பேர், செங்கல்பட்டில் 474 பேர், திருவள்ளூரில் 191 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் 7 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு 10-க்கும் கீழ் குறைவாக உள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட 139 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 416 முதியவர்களுக்கும் நேற்று கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மருத்துவமனையில் 837 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. தமிழ்நாட்டில் கரோனாபாதிப்புக்குள்ளாகி 18 ஆயிரத்து 687 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 7 ஆயிரத்து 335 பேரும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 840 பேரும், திருவள்ளூரில் 1,042 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை(10.7.2022) தமிழ்நாடு முழுவதும் 31ஆவது சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment