இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - வணிக முகவர் பணி கார்ப்பரேட் நிறுவனத்திற்கு செல்கிறதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - வணிக முகவர் பணி கார்ப்பரேட் நிறுவனத்திற்கு செல்கிறதா?

சென்னை, ஜூலை 23 வங்கி வணிக தொடர்பாளர்கள் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் கார்ப்பரேட் நிறுவனங் களிடம் ஒப்படைக்கக் கூடாது என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (அய்ஓபி) வணிக  தொடர்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக  3,500க்கும் மேற்பட்டோர் வணிக முகவர்களாக பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு முகவருக்கும் 6 கிராமங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இவர்கள் முதியோர், விதவை ஓய்வூதியம், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு ஊதியம் வழங்குவது, வராக் கடன் வசூல் செய்வது, டெபாசிட் சேர்ப்பது, ஏழை மக்களுக்கு வங்கி கணக்கு துவக்குவது.  ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு, 330 ரூபாய் காப்பீட்டு,  12 ரூபாய்க்கு இன்சூரன்ஸ் திட்டம்   சேர்ப் பது உள் ளிட்ட பல்வேறு  சேவை பணிகளுக்காக கிராமப்புறங்களுக்கு தினசரி தனது சொந்த வாகனத்தில் 70 கிலோ மீட்டர் வரை சென்று 10 மணி நேரத்திற்கும் மேல் உழைக்கிறார்கள். 

குறைந்தபட்சம் 150 பரிவர்த்தனை களை மேற் கொண்டால்தான் 2,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. சராசரி மாத வருமானம் ரூ. 8 ஆயிரம்தான் கிடைக்கும்.

இந்தப் பணிகளை ‘இண்டக்ரா’என்ற கார்ப்பரேட் நிறு வனத்திடம் ஒப்ப டைக்க அய்ஓபி நிர் வாகம் முயற்சி செய்து  வருகிறது. இதனால் தற்போது கிடைக்கும் குறைந்த வருமானமும்  பணி பாதுகாப்பும் கேள்விக்குறி யாகும். 

நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து சென்னை தொழிலாளர் நல ஆணையரிடம் தொழில் தாவா ஒன்றையும் எழுப்பி  இருக்கிறார்கள். ஆனால், வங்கி  நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக  ஒரு மாதத்திற்குள் பணியிலிருந்து நீக்குகிறோம் என தாக்கீது வழங்கியுள்ளது.  இந்த அத்துமீறலை எதிர்த்தும் தொழிலாளர் நல ஆணை யரிடம் முறையிட்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வணிக தொடர்பாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய வங்கி  ஊழியர் சம்மேளனத்து டன் இணைக்கப்பட்ட வணிக தொடர் பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் வியாழனன்று (ஜூலை 21) நடைபெற்றது.

தலைவர் எஸ்.தீனதயாளன் தலைமை தாங்கினார். இந்திய வங்கி  ஊழியர் சம்மேளனத்தில் மாநிலச் செயலாளர் என்.ராஜகோபால் துவக்கி வைத்தும், மாநிலத் தலைவர் தமிழரசு முடித்து வைத்தும் செய்து பேசினர்.  

அப்போது, “ஒரு பொதுத்துறை நிறுவனம் சட்டப்படி நடக்க வேண்டும். ஆனால் அய்ஓபி நிர்வாகம் அப்படி நடந்து கொள்ளவில்லை.  இந்த நிலைமை இப்படியே தொடர்ந் தால் சட்ட ரீதியான போராட்டத்தையும் நடத்துவோம் என்றும் இடதுசாரி தொழிற்சங்கம் உள் ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களையும் அணி திரட்டி நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் தலைவர்கள் எச்சரிக்கை செய்தனர்.


No comments:

Post a Comment