இதுதான் பிஜேபி ஆட்சி!: 988 எஸ்.சி., 576 எஸ்.டி., பணியிடங்கள் காலியாம் - அமைச்சர் ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

இதுதான் பிஜேபி ஆட்சி!: 988 எஸ்.சி., 576 எஸ்.டி., பணியிடங்கள் காலியாம் - அமைச்சர் ஒப்புதல்

புதுடில்லி. ஜூலை 23, தாழ்த்தப் பட்டவர், பழங்குடியினர் மற்றும் நலிந்த பிரிவினரை மத்திய பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் நியமனங்களில் இருந்து ஒன்றிய  அரசு ஒதுக்கி வைத்துள்ளது. பட்டியலினத்தவர்க்கு 988 இடங்களும், பழங்குடியினருக்கு 576 இடங்களும் காலியாக உள்ள தாக கல்வி  அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில்  பதிலளித்தார்.

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்  பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கை  இதர பிற்படுத்தப்பட்டோர் 1761, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகள்- 628, மாற்றுத் திற னாளிகள்-344. பேரா சிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் ஆகிய 43 பணியிடங்கள் காலியாக உள்  ளன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் தற்போது குடி யரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரவுபதி முர்மு ஆகியோரின் பெயரைச் சொல்லி பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. 

ஆனால், பட்டியலி னத்தவர், பழங்குடியினர் நலனுக்கு எதிராக செயல்படுவது அம்பலமாகி உள்ளது. 

காசர்கோட்டை மய்யமாகக் கொண்ட மத்தியப் பல்கலைக் கழகத் தில் மட்டும் 13 பட்டியலின இட ஒதுக்கீட்டுப் பணியிடங் களும், ஏழு பழங்குடியினப் பணியிடங்களும் காலியாக  உள்ளன. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவின் 18 காலியிடங்களுக்கு நியமனம் செய்யப்படவில்லை. 

பிரதமர் நரேந்  திர மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் முறையே 16, 11 மற்றும் 6 இடங்கள் காலியாக  உள்ளன. ஆட்சேர்ப்புக்கான முயற்சிகள் இருந்தபோதிலும், நலிந்த பிரிவைச் சேர்ந்த தகுதியான நபர் களைக் கண்டுபிடிக்க முடிய வில்லை என்று ஒரு விசித்திரமான- நம்பமுடி யாத எண்ணிக்கையும் பதிலாக பெறப்பட்டுள்ளது. டில்லி ஜேஎன்யுவில் 22 எஸ்சி, 10 எஸ்டி மற்றும் 33 ஓபிசி காலியிடங்கள் உள்ளன. 

அய்தராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் 74 எஸ்சி, 66 எஸ்டி மற்றும் 14 இதர பிற்படுத் தப்பட்ட காலி யிடங்கள் உள் ளன. இதற்கு பதிலளித்த ஏ.ஏ. ரஹீம், அரசியல் சாசனம் அளித் துள்ள இடஒதுக் கீட்டை மோடி அரசு வேண்டு மென்றே புறக்க ணிக்கிறது. மத்தியப் பல் கலைக் கழகங்களில் இனப்  பாகுபாட் டால் ஆசிரியர்களும் மாணவர் களும்  பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட் டினார்.

மூடப்பட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள்

கடந்த ஆண்டு ஒன்றிய அரசின் 12 உயர்  தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் தாழ்த்தப் பட்ட ஆராய்ச்சி மாணவர்களில் ஒருவரைக்  கூட சேர்க்கவில்லை. ஒரு பழங்குடி ஆராய்ச்சி  மாண வரைக் கூட சேர்க்காத 21 நிறுவனங்கள் உள்ளன. இதை மாநிலங்களவையில் கல்வித்  துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வி.சிவதா சனிடம் தெரிவித்தார். 

பெங்க ளூரு, கொல்கத்தா, இந்தூர், கோழிக்கோடு, லக்னோ, காசிபூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோட்டக், திருச்சி,  அமிர்தசரஸ், போத்கயா, சிர்மூர், விசாகப்பட்டி னம், அய்அய்எம்கள் திருப்பதி, பிலாய், மண்டி, குவாலியர், கர்னூல், பெர்ஹாம்பூர் மற்றும் போபால், அகமதாபாத், பெங் களூரு, இந் தூர்,  காஷிபூர், ராஞ்சி, ரோத்தக், திருச்சி, அமிர்தசரஸ், சிர்மவுர், விசாகப்பட்டினம் அய்அய்எம்கள், குவாலியர் மற்றும் பிலாய் அய்அய்டி கள் ஒரு பட்டியலின ஆராய்ச்சி மாணவர்க்கு கூட சேர்க்கை வழங்காத கல்வி நிறுவனங்க ளாகும்.

No comments:

Post a Comment