மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க உதவும் டிஜிட்டல் மறுவாழ்வுத் தளம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க உதவும் டிஜிட்டல் மறுவாழ்வுத் தளம்

சென்னை, ஜூலை 23 தமிழ்நாடு அரசின் சமக்ர சிக்ஷா கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்வி இயக்கத்துடன் 

(TANSMEA - SS) அமர் சேவா சங்கம், இணைந்து மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான கல்வியை வழங்க டிஜிட்டல் மறுவாழ்வுத் தளமான எனேப்ளிங் இன்க்ளூஷன் (Enabling Inclusion) வழியாக அனைவரையும் உள்ளடக்கிய கல்விக்கான மாநிலத் திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  25.7.2022 அன்று சென்னை தியாகராயர் நகரில் தொடங்கி வைக்கிறார். இதில் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்வில் இச்சங்கத்தின் 40-ஆவது ஆண்டு நினைவு மலரை வெளியிட்டு, அமர் சேவா சங்கத்தின் வாழ்நாள் ஆதரவாளர்களையும் சிறப்பிக்கிறார்.

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான டிஜிட்டல் மறுவாழ்வு தளமான எனேப்ளிங் இன்க்ளூஷனுக்கான, புதிய லோகோவை வெளியிட்டு  இச்சங்கத்தின் நிறுவனத் தலைவர்  எஸ்.ராமகிருஷ்ணன் செயலாளர் எஸ்.சங்கரராமன் ஆகியோர்  இதுகுறித்து கூறியதாவது, “மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த நான்கு தசாப்தங்களாக சேவை செய்துவரும் எங்களுடைய பயணத்தில், கல்வி, வேலை வாய்ப்பு, அதிகாரமளித்தல் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளித்து, சுயவருமானம் ஈட்டக்கூடிய குடிமக்களாக மாற்றி, முதன்மை சமூகத்துடன் இணையச் செய்வதே எங்கள் நோக்கம்.  இச்சங்க இல்லங்களில், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இலவச தங்குமிடம், உணவு, உடை, மருத்துவம், உபகரணங்கள், கல்வி, தொழில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத் திட்டங்கள் மூலம் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment