புதுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் இர.புட்பநாதன் மறைவு - மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

புதுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் இர.புட்பநாதன் மறைவு - மரியாதை

புதுக்கோட்டை மாவட்ட கழக மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் இரா.புட்பநாதன் அவர்கள் மறைவையொட்டி தலைமைக் கழகம் சார்பில் பொதுச்செயலாளர் இரா.ஜெயகுமார்,மாநில அமைப்புச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அறிவொளி, செயலாளர் வீரப்பன், மண்டல தலைவர் பெ.இராவணன், மாநில ப.க. ஆசிரியர் அணி சரவணன், ஒசூர் மாவட்ட தலைவர் வனவேந்தன், அறந்தாங்கி மாவட்ட தலைவர் மாரிமுத்து மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்களை சார்ந்தவர்கள்,பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர். அவரது இறுதி நிகழ்வில் எந்த வித மூடசடங்குகளுமின்றி அவரது உடல் அடக்கம் செய்யபட்டது. ஆசிரியர் அறிக்கையை கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் படித்தார்.தொடர்ந்து மாவட்ட தலைவர் அறிவொளி இர.புட்பநாதன் பற்றிய தகவல்களை எடுத்து சொல்லி இறுதி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.


No comments:

Post a Comment