பிஜேபி ஆளும் அசாமில் விலைவாசி உயர்வு உச்சம் சிவன், பார்வதி வேடத்தில் நடிகர், நடிகை போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

பிஜேபி ஆளும் அசாமில் விலைவாசி உயர்வு உச்சம் சிவன், பார்வதி வேடத்தில் நடிகர், நடிகை போராட்டம்


கவுகாத்தி, ஜூலை 12- விலை வாசி உயர்வுக்கு எதிராக சிவன், பார்வதி வேடத் தில் வீதி நாடகம் நடத்தி பார்வையாளர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்ட நடிகரும், நடி கையும் கைது செய்யப் பட்டு பினையில் விடுவிக் கப்பட்டனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகர் பிரின்சி போரா. இவரும் சக நடிகை பரிஷ்மிதா தாஸ் என்ற பெண்ணும் சிவன், பார்வதி வேடத்தில் அசாம் மாநிலத்தின் நகான் நகரில் புல்லட் ஒன்றில்  வலம் வந்தனர்.

காலேஜ் சவுக் பகுதி யில் இவர்கள் இருவரும் வீதி நாடகம் நடத்தினர். அவர்கள் வந்த வாகனத் தில் பெட்ரோல் தீர்ந்தது போல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நாட்டில் உணவு, எரிபொருள் மற்றும் இதர எரிபொருட்களின் விலை உயர்ந்து விட்ட தாக வசனம் பேசி பார்வை யாளர்களின் கவனத்தை ஈர்த்தனர். முதலாளிக ளின் நலனுக்காக மட் டுமே அரசு செயல்படு கிறது, சாதாரண மக்கள் பற்றி கவலைப்படவில்லை எனவும் விமர்சித்தனர்.

பின்னர் பார்வையா ளர்களுடன் இணைந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அதன்பின் படா பஜார் பகுதிக்கு சென்று இதே போல் தெரு நாடகம் நடத்தினர்இவர்கள் சிவன், பார்வதி வேடத் தில் அரசை விமர்சனம் செய்து தெரு நாடகம் நடத்தியதற்கு நகான் மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆகியவை கடும் கண் டனம் தெரிவித்தன. இரு வருடைய செயல்களும் இந்துக்களின் உணர்வு களை புண்படுத்துவதாக நகான் சதர் காவல் நிலை யத்தில் புகார் செய்யப் பட்டது.

இதையடுத்து தெரு நாடகத்தில் ஈடுபட்ட இரு வரையும் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத் துச் சென்றனர். இதன் பின் இந்த விஷயத்தில் தலையிட்ட அசாம் முத லமைச்சர் ஹிமந்தபிஸ்வா சர்மா, நடப்பு விஷயங்கள் குறித்து தெரு நாடகம் நடத்துவது குற்றம் இல்லை என்று கூறினார்.

அவர்கள் மதத்தை இழிவுப்படுத்தும் வகை யில் எதுவும் கூறவில்லை. சிவன், பார்வதி போல் உடையணிந்து தெரு நாடகம் நடத்துவது எந்த வகையிலும் மதத்துக்கு எதிரானது அல்ல என் றார். இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக் கவும் நகான் மாவட்ட காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டார். 

இதைய டுத்து நாடக நடிகர்களை பினையில் விடுவித்தனர்.

No comments:

Post a Comment