மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியப் பேராளர் மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியப் பேராளர் மாநாடு

மலேசிய திராவிடர் கழகத்தின் 76ஆம் ஆண்டு மூவாண்டு தேசியப் பேராளர் மாநாடு கழகத்தின் தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை தலைமையில். மலேசியா,கோலாலம்பூர், கெராக்கான் மண்டபத்தில் 10.7.2022 அன்று காலை 10.00 மணிக்குத் தொடங்கி மாலை 4.00 மணி வரையில்  நடைபெற்றது.

 கழக தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை அவர்கள் சிறப்புரையில், 

1946ஆம் ஆண்டு அகில மலாயா தொடங்கப்பட்டது முதல் திராவிடர் கழக கொள்கைகளையும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுச்  சிந்தனைகளையும் இந் நாட்டில் தொடர் பிரச்சாரமாக இன்று வரையில் செய்து வருகிறது. கழகத்தில் இளைஞர்களை அதிகம் இணைக்க ஆக்கப்பூர்வமான திட்டங்கள் முன்னெடுக்கப் படவுள்ளதாக அவர் தமதுரையில் தெரிவித்தார். 

கழக மாநாட்டை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த மலேசிய நாட்டின் மனிதவள துறையின் அமைச்சர் மாண்புமிகு டத்தோ சிறீ எம்.சரவணன் உரையில், 

நம் சமுதாய சுயமரியாதையை நம்மிடையே மேலோங்கச் செய்தது  தந்தை பெரியாரின் திராவிடர் கொள்கைதான். பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளர் என்று பார்க்கக்கூடாது. மாறாக பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை சிந்தனையை மக்கள் மனதில் விதைப்பதுதான் அவரின் கொள்கையாகும். பெரியார் தன் துன்பங்களை மறைத்து சமுதாயத்திற்காக சேவையாற்றிய சிறந்த மனிதர். அவரை பற்றி இளைஞர்கள் தெரிந்திருப்பது அவசியம் என தமது சிறப்புரையில் கூறினார்.

 மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம் 

1) பொங்கல் தமிழ்ப்புத்தாண்டுக்கு   பொது விடுமுறை அரசாங்கம் வழங்கவேண்டும்

2) தமிழ்பள்ளியே நமது தேர்வாகவும், அதிகமான மாணவர்களை  தமிழ்பள்ளியில் சேர்க்க வேண்டும்

3) அடுத்த தலைமுறையினர் தெரிந்துக்கொள்ளும் வகையில் கழகத்தின் 76ஆண்டு வரலாற்று நூல் தொகுத்து வெளியிடுவது. 

4) கழகத்தில் அதிக அளவில் இளைஞர்களைச் சேர்பதற்காக தேசிய அளவில் இளைஞர் மகளிர் பயிற்சி பட்டறை வழங்குவது அனைத்து  பேராளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

2022 முதல் 2025ஆம் ஆண்டுக்கான மூவாண்டு பொறுப்பாளர் தேர்வினை வழக்குரைஞர் வ.வனராணி நடத்தி வைத்தார். 

தேர்வுப் பெற்றவர்கள்

1) தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை

2)தேசிய துணைத் தலைவர் சா.இரா.பாரதி

3)தேசிய உதவித் தலைவர் இரா.மனோகர்

4)தேசிய உதவித் தலைவர் வீ.இளங்கோவன்.

5)தேசியப் பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம்

6)தேசிய துணைப் பொதுச் செயலாளர் ச.நாகேந்திரன்

7)தேசியப் பொருளாளர் கு.கிருட்டிணன்

8)தேசிய அமைப்புச் செயலாளர் மு.இராதாகிருஷ்ணன்

9)தேசிய நிதிச் செயலாளர் இரா.காளிதாசன்

10)தேசிய இளைஞர் தலைவர் பா.சோமசம்பந்தனார்

11)தேசிய இளைஞர் செயலாளர் பா.விக்கினேஸ்பாபு

12)தேசிய மகளிர் தலைவி சு.குமுதா

13) தேசிய மகளிர் செயலாளனி க.சாந்தி

14) மத்தியச் செயலவை உறுப்பினர் த.பெருமாள்

15) மத்தியச் செயலவை உறுப்பினர் மு.குமார்

16) தேசியக் கணக்காய்வாளர் த.ராஜசேகரன்

17) தேசியக் கணக்காய்வாளர் ஞா.தமிழ்செல்வி.

இவர்கள் அனைவரும் போட்டியின்றி அனைத்து  பேராளர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்

மாநாட்டில் தேர்வுப் பெற்ற பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம்     கழகத்தின்   மாநாட்டை அதிகாரப்  பூர்வமாக திறந்து வைத்து மானியம் வழங்கிய மனிதவள அமைச்சர் டத்தோ சிறீ. எம். சரவணன் அவர்களுக்கும், ச.த. அண்ணாமலையின் தலைமையில் தேர்வுப் பெற்ற  பொறுப்பாளர்களுக்கும், மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினருக்கும், திரளாக கலந்துக்கொண்ட பேரா ளர்களுக்கும், நாளிதழ்களுக்கும், மின்னியல் ஊடகங்களுக்கும், காவல்துறையினருக்கும்,  கழக நடவடிக்கைகளில் நெடுங் காலமாக  நம்முடன் பயணித்து வரும்  தமிழக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும், அதேவேளையில் மாநாடு வெற்றி பெற எல்லா வகையிலும் துணைநின்ற   அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி பாராட்டி மாநாட்டை நிறைவு செய்தார். 

பெரியாரைப் பற்றி பேசாதவர் மனிதரே அல்லர்!

மலேசிய நாட்டு அமைச்சர் டத்தோசிறீ சரவணன்

பெரியார் கொள்கைகளைப் பற்றி அறிந்திருக்காமல் அதனை புறக்கணிப்பவர் களும் பகுத்தறி வாளர் பெரியாரைப் பற்றிப் 'பேசாத வர்களும் மனிதரே கிடையாது என மஇகாவின் துணைத் தலைவரும் மனிதவள அமைச்சருமான டத்தோசிறீ எம். சரவணன் சூளுரைத்தார்.

பெரியாரைப் பற்றி பாட நூலில் வெளியானதை தொடர்ந்து பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று நம் சமுதாய சுயமரியாதையை நம்மிடையே மேலோங்கச் செய்தது பெரியாரின் திராவிடர் கொள்கை தான். அவர் ஒன்றும் கடவுளை புறக்கணிப்பவர் அல்லர். மாறாக பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை சிந்தனையை மக்கள் மனதில் விதைப்பதுதான் அவரின் கொள்கை யாகும்.

அவரைப் பற்றித் தெரியாதவர் கள்தான் தேவையில்லாத கருத் துகளை பேசுவதுடன் அவர்களின் அந்த கருத்துகளை இளைஞர்கள் மனதிலும் விதைத்து வைக்கின்றனர்.

பெரியார் தன் துன்பங்களை மறைத்து சமுதாயத்திற்காக சேவையாற்றிய சிறந்த மனிதர். அவரைப் பற்றி இளைஞர்கள் தெரிந்திருப்பது அவசியம் என கெராக்கான் கட்சியின் தலைமையக மண்டபத்தில் நடைபெற்ற மலேசிய திராவிடர் கழகத்தின் 75 ஆம் மூவாண்டு தேசியப் பேராளர் மாநாட்டில் சிறப்புரையில் அவர் கூறினார்.

மலேசிய திராவிடர் கழகமும் மஇகா கட்சியும் பிரிக்கமுடியாத உறவாகும். மலேசிய மண்ணில் நம் சமுதாயத்திற்காக முதல் முதலாக தொடங்கப்பட்ட அமைப்புகளில் இவை இரண்டும் அடங்கும். சமூக சேவைக்காக மஇகா செயல்பட்ட வேளையில், சுயமரியாதையை காப்பதற்காக திராவிட கழகமும், இளைஞர்களின் வளர்ச்சிக்காக மணிமன்றமும் தொடங்கப்பட்டன என அவர் சொன்னார்

மேலும் நம் நாட்டில் ஜாதி என்ற வார்த்தை தற்போது தலையோங்கி யுள்ளது. இவற்றை நாம் புறக்கணிக்க வேண்டும். ஜாதி என்ற வார்த்தை நம்மிடையே பிளவை ஏற்படுத்தும்.

ஆகையால் இளைய தலை முறையினர் பெரியார் கொள்கையை தெரிந்து கொண்டு நம் சமுதாய நன்மைக்காக தேவையானவற்றை கடைப்பிடிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையே மலேசிய திராவிடர் கழகத்தின் தேவை களை என்னால் முடிந்தவரை நான் பூர்த்தி செய்வேன் என்றும் அடுத்த தலைமுறையினரை கழகத்தில் இணைப்பதற்கான திட்டங்களை கழகம் முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் ஆலோ சனை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திராவிடர் கழக பேராளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

(காளிதாசன் தியாகராஜன் - ஆர்.குணா)


No comments:

Post a Comment