ஒசூர், ஜூலை 9 நீட் தேர் வுக்கு பயந்து பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் தற்கொலை செய்து கொண் டார். கிருஷ்ணகிரி மாவட் டம் ஓசூர், அரசனட்டியை சேர்ந்தவர் கோபி. இவர் தனியார் தொழிற் சாலையில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மோகன சுந்தரி. இவர்களது மகன்கள் முரளி கிருஷ்ணா, கீர்த்தி வாசன்.
கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற முரளி கிருஷ் ணா நீட் நுழைவுத் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றார்.
இத னால் மருத்துவக்கல் லூரியில் இடம் கிடைக்காத நிலையில் மீண்டும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத அவர் தயாராகி கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் வருகிற 17ஆம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வந்தது. இதைப் பார்த்து முரளி கிருஷ்ணா மனஅழுத் தத்தில், தன்னால் மீண்டும் நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுக்க முடியுமா? என்ற பயத் தில் இருந்தார்.
மேலும் மன உளைச்சலில் தவித்த அவர் நீட் தேர்வுக்கு பயந்து தான் தற்கொலை செய்து கொள்வதாக உருக் கமான கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவர் முரளி கிருஷ்ணா தனது பெற் றோருக்கு எழுதி வைத் திருந்த அந்த கடிதத்தில், எனக்கு நீட் தேர்வு ரொம்ப கஷ்டமா இருக்குமா.
தேர்வில் என்னால நல்ல மதிப் பெண் பெற முடியாது. முடிந்த அளவு நான் முயற் சித்தேன்.
ஆனால், மருத்துவக் கல் லூரியில் இடம் வாங்கும் அளவிற்கு என்னால் மதிப் பெண் பெற செய்ய முடியாது. நான் இந்த முடிவை எடுத்த தற்கு மன்னிச்சிரும்மா என்று உருக்கமாக அந்த கடிதத்தில் முரளிகிருஷ்ணா எழுதியிருந் தார்.
இந்த கடிதத்தை ஓசூர் சிப்காட் காவல்துறையினர் கைப்பற்றினர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

No comments:
Post a Comment