ஆச்சரியம்: திருவள்ளுவர் உருவம்போல் நடவு செய்த விவசாயி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

ஆச்சரியம்: திருவள்ளுவர் உருவம்போல் நடவு செய்த விவசாயி

 

கும்பகோணம்,ஜூலை 9   தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த மலையப்பநல்லூரில் வயல் திருவிழா நடந்தது. இதில், உழவுக்கென்று திருக்குறளில் தனி அதிகாரம் கொடுத்து உலக மக்களுக்கு உழவுத் தொழிலின் சிறப்பை உணர்த்திய திருவள்ளுவரின் உருவத்தை, இயற்கை விவசாயி இளங்கோவன் நாற்றுகள் மூலம் நடவு செய்துள்ளார். நேபாளத்தில் உள்ள சின்னார் என்ற நெல் ரகம், மைசூர் மல்லி என்ற நெல் ரகத்தால் 50 அடி நீளம், 45 அடி அகலத்தில் திருவள்ளுவரின் உருவ அமைப்பில் நடவு செய்துள்ளார்.

இதை அரசு தலைமை கொறடா கோவி.செழியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வித்யா உள்ளிட்டோர் பார்வையிட்டனர். 


No comments:

Post a Comment