கொல்கத்தா, ஜூலை 9 பா.ஜ.க. ஒன்றும் ஹிந்து தெய்வங்களின் பாதுகாவலர்கள் அல்ல. 'காளி' தேவியை எவ்வாறு வழி படுவது என்பதை வங்காளிகளுக்கு பா.ஜ.க. கற்பிக்க வேண்டாம் என்று திரி ணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப் பினர் மஹுவா மொய்த்ரா தெரிவித்துள் ளார்.
கடந்த 2,000 ஆண்டுகளாக பல்வேறு சடங்குகளைக் கொண்ட இந்திய நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் மீது வட இந்தியாவில் உள்ள தெய்வங்களை வழி படும் நடைமுறைகளின் அடிப்படையில் பாஜக தனது கருத்துக்களை திணிக்க முடியாது என்று மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
கனடாவில் வசித்து வரும் தமிழ்நாட் டைச் சேர்ந்த லீனா மணிமேகலை, ‘காளி’ என்ற ஆவணப்படத்தை தயாரித்துள் ளார். அதன் போஸ்டர், கனடாவின் ஆகா கான் அருங்காட்சியகத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது. அதில், காளி வேட மணிந்த பெண் ஒருவர் கையில் சிக ரெட்டுடனும், மற்றொரு கையில் பால் பதுமையினரின் கொடியை பிடித்திருப்பது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தன. போஸ்டர் சர்ச்சையானது. இதற்கு வலது சாரிகள் கடும் கண்டனம் தெரிவித்தி ருந்தனர்.
இப்பிரச்சினை தொடர்பாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, ''காளி என்னைப் பொறுத்த வரை இறைச்சி உண்ணும், மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம். உங்கள் தெய்வத்தை கற்பனை செய்ய உங் களுக்குச் சுதந்திரம் இருக்கிறது. சில இடங்களில் கடவுள்களுக்கு மது வழங்கப்படும், வேறு சில இடங்களில் அது தெய்வ நிந்தனையாக இருக்கும். உதாரணமாக, நீங்கள் சிக்கிம் சென்றால் அங்கே காளி தேவிக்கு மதுவைப் பிர சாதமாகக் கொடுப்பதைக் காண்பீர்கள். ஆனால் நீங்கள் உத்தரப்பிரதேசத்துக்குச் சென்று, மது 'பிரசாதமாக' வழங்கப்படு கிறது என்றால் அவர்கள் அதை நிந்தனை என்று முகம் சுளிப்பார்கள். எனவே, உங்கள் தெய்வத்துக்கு நீங்கள்தான் எல்லாம்” என்று தெரிவித்திருந்தார்.
''ஹிந்துத்துவாவின் செயல் திட் டத்தை இந்திய மக்கள் மீது திணிக்க பாஜக முயற்சிக்கிறது. அதன் ஒற்றை தன்மை கொண்ட கருத்துக்களை மற்ற இனக் குழுக்கள் மீது பாஜக திணிக்க முயற்சிக்கிறது. பாஜகவின் முயற்சியை எதிர்க்கவும், நாட்டின் நலனுக்காகவும் தான் காளி பட விவகாரம் குறித்து நான் பேசினேன்'' என்றும் அவர் தெரி வித்துள்ளார்.
''ராமரோ அல்லது அனுமனோ பாஜகவுக்கு மட்டுமே சொந்தமானவர்கள் அல்ல. பா.ஜ.க. ஹிந்து தர்மத்தை குத்தகைக்கு எடுத்துள்ளதா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மஹூவா மொய்த்ராமீது பஜ்ரங் தளம் சார்பில் காவல்துறையில் புகார் அளித்ததன் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கருத்து தெரிவித்துள்ள அவர், என் மீது வழக்குப் பதிவு செய் துள்ள பா.ஜ.க. ஆளும் மாநில அர சாங்கங்கள் அவர்களது மாநிலத்தில் காளிதேவிக்கு வழங்கப்படும் 'பிரசாதம்' குறித்து நீதிமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று நான் சவால் விடுகிறேன். 'காளி தேவிக்கு காணிக் கையாக சாராயம்' படைக்கப்படுவதில் லையா?'' என்று அவர் கேள்வி எழுப்பி யுள்ளார்.

No comments:
Post a Comment