பாரதீய ஜனதா உள்பட எந்த கட்சியிலும் சேரமாட்டேன்: தடகள வீராங்கனை பி.டி.உஷா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

பாரதீய ஜனதா உள்பட எந்த கட்சியிலும் சேரமாட்டேன்: தடகள வீராங்கனை பி.டி.உஷா

திருவனந்தபுரம், ஜூலை 9 கேரளாவை சேர்ந்த ஒலிம்பிக் தடகள வீராங்கனை பி.டி.உஷா டில்லி மேலவையின் நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டு உள்ளார். பாரதீய ஜனதா ஆட்சி காலத்தில் அவருக்கு நியமன உறுப்பினர் பதவி கிடைத்து இருப்பதால் அவர் பாரதீய ஜனதா கட்சியில் சேரப்போவதாக தகவல் பரவியது. இதனை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் சிலர் விமர்சித்து இருந்தனர். இதற்கு பதில் அளித்து பி.டி.உஷா கூறியதாவது:- 

எனக்கு விளையாட்டு பிடிக் கும். விளையாட்டில் நான் சாதித்த தால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இதற்காக நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை. பாரதீய ஜனதா உள்பட எந்த கட்சியிலும் இணைய மாட்டேன். எனக்கு பாரதீய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு என அனைத்துக் கட்சியினரையும் பிடிக்கும். எம்.பி.யானால் நான் டில்லியிலேயே இருக்க மாட் டேன். நான் நடத்தி வரும் பள் ளியை விட்டுவிட முடியாது. அதே நேரம் விளையாட்டிற்கும், பொது சேவையிலும் என்னால் முடிந்ததை செய்வேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment