ஒலியால் இயங்கும் சில்லு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

ஒலியால் இயங்கும் சில்லு!

முதலில் எலக்ட்ரானால் இயங்கும் கணினி சில்லுகள் வந்தன. அடுத்து, ஒளியால் இயங்கும் அதிவேக போட்டோனிக் சில்லுகள், ஆய்வுக்கூடத்தைவிட்டு வெளியேறத் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒலியை வைத்து சில்லுகளை தயாரிக்க முடியும் என்பதை சோதனை அளவில் செய்து காட்டியுள்ளனர். அவர்களது கருத்துப்படி, ஒலியால் இயங்கும் சில்லில், தகவல்களை பதியவும், பரிமாறவும், அதிவேகமாக அலசவும் முடியும்.

ஒலிச் சில்லில், 'லித்தியம் நியோபேட்' என்ற வேதிப் பொருள் வாயிலாக ஒலியைக் கட்டுப்படுத்தும் அமைப்பை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். லித்தியம் நியோபேட் மீது மின்சாரம் பாயும்போது, அது நெகிழ்வுத் தன்மை அடைந்து, ஒலி அலையை உண்டாக்குகிறது. மின்சாரத்தின் அளவை மாற்றுவதன் மூலம், லித்தியம் நியோபேட் உருவாக்கும் ஒலி அலையை மாற்ற முடியும்.

இந்த ஒலி அலை மூலம் தகவல்கள் ஒலியின் வேகத்தில் கடத்த முடியும். ஒலி அலைகளும் ஒன்றை ஒன்று பாதிக்காமல் பயணிக்கக்கூடியவை. ஒலி அலைகளை நியோபேட் வாயிலாக கட்டுப்படுத்த முடியும். எனவே, ஒலித் சில்லுகளை முழுவீச்சில் தயாரிக்க, ஹார்வர்டு விஞ்ஞானிகள் தயார்.


No comments:

Post a Comment