மாரடைப்பின் பாதிப்பை அழிக்கும் ஜெல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

மாரடைப்பின் பாதிப்பை அழிக்கும் ஜெல்!

மாரடைப்பு வந்து, இதயத்தின் தசை பாதிக்கப்பட்ட இடத்தில், புதிய தசையை உருவாக்க ஒரு ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரு ஜெல் போன்ற பொருளை உருவாக்கியுள்ளனர்.

புரதங்களை உண்டாக்கும் திறன் கொண்ட, பெப்டைடுகள் எனப்படும், அமினோ அமிலங்களை கொண்டது அந்த ஜெல். இது ஊசி மூலம் செலுத்தப்படும்போது ஏற்படும் அழுத்தத்தால், திரவம் போல மாறுகிறது. 

ஊசியிலிருந்து வெளியேறி, அழுத்தம் குறையும்போது, மீண்டும் சற்று குழைவான ஜெல் போல மாறிவிடுகிறது.இதனால் பெப்டைடு ஜெல், புதிய இதயத் தசை செல்களை தாங்கிப் பிடித்து வளர உதவும் சாரம் போல செயல்படுகிறது.


No comments:

Post a Comment