தேவகோட்டை, ஜூலை 7- தேவகோட்டை ஒன்றிய கலந்துரையாடல் கூட் டம் காரைக்குடி கழக மாவட்ட துணைத் தலை வர் கொ.மணிவண்ணன் தலைமையில் அவரது இல்லத்தில் 3.7.22 ஞாயிறு மாலை தேவகோட்டை யில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ச. அரங்கசாமி, மாவட்ட செயலாளர் ம. கு. வைகறை முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திராவி டர்களின் போர் வாளான விடுதலை ஏட்டுக்கு சந்தா சேர்த்தலை விரைந்து முடிப்பதெனவும், ஜூலை 30இல் அரியலூர் மாநில இளைஞரணி மாநாட் டில் பெருந்திரளாக பங் கேற்பதெனவும் தீர்மா னிக்கப்பட்டது.
நிகழ்வில் நகர செய லாளர் வழக்குரைஞர் வி.முத்தரசு பாண்டியன், ந.பாரதி தாசன், தேவ கோட்டை ஒன்றிய துணைத் தலைவர் அ.ஜோசப். ம. வள்ளியம்மை, பத்திரிகை யாளர் சிவ தில்லை ராஜா ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment