இரு மாதங்களுக்கு முன்பு பத்திரிகையாளரும், ‘அருஞ்சொல்' இணைய இதழின் ஆசிரியருமான சமஸ், திராவிடர் கழகத்தின் தலைவரும், 'விடுதலை' ஏட்டின் ஆசிரியருமான தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் நீண்டதொரு நேர்காணலை சென்னை பெரியார் திடலில் ஒளிப்பதிவு செய்தார். பன்முக ஆற்றல் கொண்ட தமிழர் தலைவர் அவர்களிடம், 'விடுதலை' ஏட்டின் ஆசிரியராக தொடர்ந்து 60 ஆண்டு பணி - பங்களிப்பு தொடர்பான நேர்காணல் நடத்தப்பட்டது.
ஒளிப்பதிவு செய்யப்பட்ட நேர்காணல் அண்மையில் யுடியூபில் https://youtu.be/ZgzN5gCsrrQ இணைப்பில் பலரும் பார்த்திடும் வகையில் ஏற்றப் பட்டுள்ளது.
இந்த நேர்காணல் தொடர்பில் வந்த எதிர்வினை தொடர்பாக சமஸ் அவர்களது முகநூல் பதிவு இங்கே வெளிடப்படுகிறது.
சற்று முன் பி.ஏ.கிருஷ்ணன் அழைத்தார். "திக தலைவர் கி.வீரமணியின் பேட்டியைப் பார்த்தேன். மிக முக்கியமான பேட்டி" என்றார்.
"பெரிய சாதனை இது! 60 ஆண்டுகள் ஒரு தினசரி பத்திரிகையைத் தொடர்ந்து பொறுப்பேற்று நடத்துவ தும், எழுதுவதும் எவ்வளவு பெரிய விஷயம்! எந்த ஊடகமும், யாரும் கவனப்படுத்தாத விஷயத்தை நீங்கள் சரியாகக் கவனப்படுத்தியிருக்கிறீர்கள்.
அதேபோல, ஒரு மணி நேரப் பேட்டியும் முழுக்க அவருடைய பத்திரிகை அனுபவங்களையும், பெரியா ருடைய பத்திரிகைப் பங்களிப்பையும் பற்றி மட்டும் பேசுவதாக அமைந்திருப்பதும், பேட்டி திசை மாறிடா மல் ஒரே நேர்க்கோட்டில் சென்றிருப்பதும் பிரமாதமான விஷயம்!
90 வயதில் ஒருவர் இவ்வளவு துல்லியமாகப் பேசுவது ஆச்சரியம். நான் இதுகுறித்து எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று சொல்லி பூரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
"நன்றி, வாய்ப்பு கிடைக்கும்போது எழுதுங்கள்" என்றேன்.
பெரியார், திராவிடர் கழகம், வீரமணி, விடுதலை இந்தப் பெயர்கள் எல்லாம் பி.ஏ.கிருஷ்ணனுக்கு எவ்வளவு கசக்கும் என்பது ஊருக்கே தெரியும்.
ஆனால், அவர் எதிர்க்கும் ஒரு கொள்கை சார்ந்து அவர் அளிக்கும் தொடர் கவனத்தையும், வாசிப்பை யும், உழைப்பையும் இங்கே தான் நேசிக்கும் கொள்கை சார்ந்து எத்தனை பேர் கொடுக்கத் தயாராக இருக் கிறார்கள் என்று கேட்டுக்கொண்டால் பலருக்கு ஏமாற்றமே எஞ்சும் என எண்ணுகிறேன்.
இப்படியொரு பேட்டி வெளியாகி ஒரு மாதம் ஆகிறது; அதுகுறித்து பி.ஏ. கிருஷ்ணன் போல எவர் ஒருவரும் என்னிடம் பேசவில்லை. அந்தப் பக்கம் பேட்டி தந்த ஆசிரியரிடமும் எவரும் பேசியதாகத் தெரியவில்லை. சொல்லபோனால், இன்று வரை வெறும் 4500 பார்வைகளை மட் டுமே கடந்திருக்கிறது அந்தக் காணொளி.
இது வெறும் ஒரு பேட்டி சம்பந்தமான விஷயம் இல்லை. 60 ஆண்டுகள் ஒரு தினசரி பத்திரிகையை சமூகப் பண்பாட்டு இயக்கம் ஒன்று இடையறாது நடத் திடுவது பத்திரிகைத் துறையில் உலக அளவிலான அரும்பணிகளில் ஒன்று.
இப்படிப்பட்ட தீவிரமான விஷயங்களுக்கு ஒரு சமூகமாக நாம் கொடுக்கும் மரியாதை என்ன என்ற கேள்வி தொடர்பிலானது; வெளியே தீவிரமான விஷயங்களுக்காகக் கொடுக்கப்படும் போலி குரல் களுக்கும், உள்ளே நாம் வெளிப்படுத்தும் அசலான அக்கறைகளுக்கும் இடையிலான தலைகீழ் வேறு பாடு அது.
இதுவரை இத்தகைய ஓர் அரும்பணிக்காகப் பொதுச் சமூகத்திலிருந்து கி.வீரமணி அவர்கள் எந்த அங்கீகாரத்தையும் பெற்றது இல்லை. ஆனால், "ஆசிரியர் என்று அழைக்கிறீர்களே, எந்தப் பள்ளிக் கூடத் துக்கு ஆசிரியராக இருந்தார் வீரமணி?" என்று கூசாமல் பல தற்குறிகள் கேள்வி கேட்கும் சூழல் இந்தச் சமூகத்தில் இருக்கிறது என்றால், அதற்கு இந்த போலி அக்கறைக் குரல்களும் ஒரு காரணம் என்று எண்ணுகிறேன்.
- சமஸ் முகநூல் பதிவிலிருந்து


No comments:
Post a Comment