இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பியோட்டம்: தற்காலிக அதிபராக ரணில் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பியோட்டம்: தற்காலிக அதிபராக ரணில் நியமனம்

கொழும்பு, ஜூலை 13 இலங்கையில் மக்கள் போராட் டம் வலுவடைந்த சூழலில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி, மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார்.

அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று (13.7.2022) அதிகாலை ராணுவ விமானம் மூலம் தனது மனைவியுடன் இலங்கையில் இருந்து புறப்பட்டார். அவரு டன் பாது காவலர்கள் இருவரும் உடன் சென்றுள் ளனர்.  மாலத்தீவுக்குச் சென்ற டைந்த அவர், ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக் கின்றன. அவருக்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட் டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொரு ளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச்மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், கடந்த 9.7.2022 அன்று அதிபர் கோத்தபய ராஜ பக்சேவின் அதிகாரபூர்வ மாளி கைக்குள் புகுந்து போராட்டத் தைத் தீவிரப்படுத்தினர்.

ஆனால், அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய, ராணுவத் தலைமையிடத்தில் பாதுகாப் பாக இருந்ததாகக் கூறப்பட்டது. மக் களின் போராட்டம் தீவிர மடைந்த தையடுத்து, தனது பதவியை இன்று (ஜூலை 13) அதிபர் கோத்தபய ராஜிநாமா செய்யவுள்ளதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாபா அபேவர்தனா தெரிவித்திருந் தார். இதைத் தொடர்ந்து கூட் டணி அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கட்சி கள் துரிதப்படுத்தியுள்ளன. நாட்டின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற் கான தேர்தல் 20ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர் பாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், போராட்டக் காரர்கள் தனது மாளிகைக்குள் நுழையும் முன்பே அதிபர் கோத்த பய ராஜபக்சே அங்கி ருந்து வெளியேறி, இலங்கை கடற்படைத் தளத்தில் உள்ள ரகசிய அறையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளி யானது.

இதனிடையே நேற்று முன்தினம் (11.7.2022) அதிபர் கோத்தபய ராஜ பக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே இலங்கையில் இருந்து விமானம் மூலம் துபாய்க்கு தப்பி செல்ல முயன் றார். இவர் மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் நிதியமைச்ச ராக பதவி வகித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் தப்பி செல்ல திட்டமிட்டு, கொழும்பு பன் னாட்டு விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். முகக்கவசம் அணிந்திருந்த நிலையிலும் விமான நிலைய அதிகாரி களும், அங்கிருந்த போராட்டக்காரர் களும் பசில் ராஜபக்சே தப்பிச் செல்வதை கண்டுபிடித்து அவரைத் தடுத்து நிறுத்தி விமான நிலையத்திலேயே சிறை வைத்தனர். இதனிடையே, கடல்வழியாக தப்பிச் செல்ல அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டமிட்டி ருந்த தாகவும் ஒரு தகவல் வெளி யானது. விமான நிலையத்தில் கெடுபிடிகள் அதிகம் இருப்பதா லும், அங்கு போராட்டக் காரர்கள் குவிந்திருப் பதாலும் அவர் கடல்வழியாக வெளி நாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்து வருவதாகவும், அவர் அய்க்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரத்துக்கு தப்பிச் செல்ல முயல்வ தாகவும் தகவல்கள் பரவின. இதற் காக திரிகோணமலை கடல் அருகே உள்ள பகுதியில் இருந்து கடற் படைக்குச் சொந்தமான மிகப்பெரிய படகு மூலம் கோத்தபய ராஜபக்சேவும், அவரது உறவினர் களும் கடந்த 9.7.2022 அன்று திரிகோணமலை பகுதிக்கு வந்ததாக வும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொழும்பு பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

இதனிடையே தானும், தனது குடும்பத்தாரும் பாதுகாப்பாக வெளி யேறும் வரையில் அதிபர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என்று அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்திருந்தார். நேற்று காலை வரை ஜூலை 13ஆம் தேதி (இன்று) பதவி விலகுவேன் என்று அறிவித்து வந்த அதிபர் கோத்தபய திடீரென நேற்று மாலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் மனு: இதனிடையே, அதிபர் கோத்த பய ராஜபக்சே, அவரது தம்பி பசில் ராஜபக்சே ஆகியோர் வெளிநாடு செல்ல இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என்று இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசா வழங்க மறுப்பு: இந் நிலையில் அமெரிக்காவில் தங்கு வதற்கு அதிபர் கோத்தபய ராஜ பக்சே அமெரிக்க நாட்டின் விசா வுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் இலங்கையில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் காரணமாக கோத்த பய கேட்டிருந்த விசா வழங்கப்படாது என்று அமெ ரிக்க அரசு மறுப்பு தெரிவித்துள்

ளது. இந்தப் பின்னணியில்தான் இப்போது மாலத்தீவில் கோத்த

பய ராஜபக்சே தஞ்சம் அடைந் துள்ளார்.  

இதனையடுத்து  இலங்கையின் தற்காலிக அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை  அந்நாட்டின் நாடாளு மன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். 

No comments:

Post a Comment