பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

சென்னை, ஜூலை 19   தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

2022-2023 கல்வி ஆண்டுக்கான பிஇ, பிடெக், பிஆர்க் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இணையதளத்தில் இதுவரை 1 லட்சத்து 76 ஆயிரத்து 155 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 605 விண்ணப்பங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட பொறியியல் படிப்புகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஜூலை 19ஆம் தேதி (இன்று) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால், அந்த மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, அன்றைய நாளில் இருந்து மேலும் 5 நாட்கள் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசம் அனைவருக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment