40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா
மறைந்த பொறியாளர் கோவிந்தராசன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவாக இணையர் கனிமொழி, மகள் மருத்துவர் தென்றல் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து அய்ந்து ஆண்டு விடுதலை சந்தா ரூ. 10,000/- வழங்கினர். உடன் டி.கே.பொன்னுச்சாமி.  (18.07.2022, பெரியார் திடல்).
சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜெயராமன் ஆகியோர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து 8 ஆண்டு சந்தாக்கள்  ரூ. 16,000, 9 அரையாண்டு சந்தாக்கள் ரூ.9,000/- என மொத்தம் ரூ.25,000 விடுதலை சந்தா வழங்கினர். (18.7.2022, பெரியார் திடல்).
-----------------

பாப்பாரப்பட்டியில் விடுதலை சந்தா சேர்ப்பு பணி

பாப்பாரப்பட்டி மற்றும் பாலக்கோடு பகுதியில் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் புலவர் இரா.வேட்ராயன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர். இ.மாதன் விடுதலை வாசகர் வட்ட தலைவர் கா.சின்னராஜ், பாப்பாரப்பட்டி நகரத் தலைவர்ஆசிரியர் மா. சுந்தரம் ஆகியோர் முன்னிலையில், புலவர் இரா.வேட்ராயன்அவர்களின் மருமகனும் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை இயக்குநருமான மருத்துவர், வி.கோவிந்தன், இரா. கவியரசி குடும்பத்தினர் ஓராண்டு விடுதலைச் சந்தா வழங்கி சிறப்பித்தனர். உடன் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் தமிழ் பிரபாகரன், மண்டல ஆசிரியர் அணி அமைப்பாளர் இரா கிருஷ்ணமூர்த்தி இருந்தனர்.

-----------------
சோழிங்கநல்லூர் மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு பணி
சோழிங்கநல்லூர் காரப்பாக்கம் மேனாள் அ.தி.மு.க.சேர்மன் லைன் சுந்தரம் ஓர் ஆண்டு விடுதலை சந்தா ரூபாய் இரண்டாயிரம், சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் அரவிந் ரமேஷ் அய்ந்து ஆண்டு விடுதலை சந்தா ரூபாய் பத்தாயிரம் மாவட்ட கழக தலைவர் ஆர்.டி.வீரபத்திரனிடம் வழங்கினர். மாவட்ட கழக செயலாளர் விஜய் உத்தமன் ராஜ், மாவட்ட கழக அமைப்பாளர் குழ.செல்வராசு, மாவட்ட ப.க தலைவர்  பி.சி.ஜெயராமன், வேலூர் பாண்டு, அவர் மகன், மற்றும் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
-----------------
மேட்டுப்பாளையம் மாவட்டத்தில் 17-07-2022 அன்று மாவட்டத்தலைவர் சு.வேலுச்சாமி தலைமையில், மாவட்டச் செயலாளர் கா.சு.ரெங்கசாமி, நகரச்செயலாளர் வெ.சந்திரன், காரமடை ஒன்றிய தலைவர் ஏ.எம்.ராஜா ஆகியோர் முன்னிலையில் மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை சந்தா முதல் தவணையாக ரூ 50,000 வழங்கினர்.
-----------------
மாவட்ட செயலாளர் மு.நாகேந்திரன் தலைமையில், மண்டல தலைவர் ஆ.கருணாகரன், பொதுக்குழு உறுப்பினர் இராவணன் மாவட்ட ப.க செயலாளர் வாசுதேவன், காரமடை ஒன்றிய தலைவர் கி.வி.இராஜா ஆகியோர் முன்னிலையில் குன்னூர் தி.மு.க நகர செயலா ளர் வி.இராமசாமி கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  விடுதலை சந்தா  வழங்கினார்.
-----------------
பெரியார் மருத்துவ குழும தலைவர் டாக்டர் இரா.கவுதமன் மாவட்ட செயலாளர் மு.நாகேந்திரன், மண்டல தலைவர் ஆ.கருணாகரன், பொதுக்குழு உறுப்பினர் இராவணன், மாவட்ட துனைத் தலைவர் சத்தியநாதன், மாவட்ட ப.க.செயலாளர் வாசுதேவன், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரேம்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜீவா, சண்முகசுந்தரி, ரவி, முருகன், தினேஷ் காரமடை ஒன்றிய தலைவர் ஏ.எம்.இராஜா ஆகியோர் முன்னிலையில் நீலமலை மாவட்டம் சார்பில் முதல் தவணையாக கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  விடுதலை சந்தா வழங்கினர்.
-----------------
தாம்பரம் மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு பணி
கூடுவாஞ்சேரி பகுதியில் தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், மா.இராசு, மகாலிங்கம், மு.தினேஷ்குமார்,மு.ராஜேஷ் மற்றும் தாம்பரம் சு.மோகன்ராஜ் ஆகியோர் விடுதலை சந்தா சேர்ப்பு பணியில் ஈடுபட்டனர். கூடுவாஞ்சேரி பேரூராட்சி சந்தோஷ்குமார் அரையாண்டு சந்தா,  கூடுவாஞ்சேரி மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளரும் நியூ ஆற்காடு பிரியாணி உணவக உரிமையாளருமான ஹைதர் அலி அரையாண்டு சந்தா, கூடுவாஞ்சேரி பு.இளஞ்செழியன் அரையாண்டு சந்தா, கூடுவாஞ்சேரி பேரூராட்சி துணைத் தலைவர் வழக்குரைஞர் லோகநாதன்  ஓராண்டு சந்தா, கூடுவாஞ்சேரி திருக்குறள் பேரவை திருநாவுக்கரசு அரையாண்டு சந்தா, கூடுவாஞ்சேரி பேரூராட்சி மாமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்  ஓராண்டு சந்தா, கூடுவாஞ்சேரிமோகனசுந்தரம் அரையாண்டு சந்தா,  கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணைச் செயலாளர் தோழர் ரமணன் ஓராண்டு சந்தா, கூடுவாஞ்சேரி தமிழ் ஓவிய அறிவரசி ஓராண்டு சந்தா வழங்கினர். (17.7.2022).

கூடுவாஞ்சேரி விஜயகுமார் கண்ணகி ஓராண்டு சந்தா, கூடுவாஞ்சேரி பேரூராட்சி தலைவர் த.கார்த்திக் ஓராண்டு சந்தா, கூடுவாஞ்சேரி ஜெயராமன் ஓராண்டு சந்தா, கூடுவாஞ்சேரி செல்வராஜ் ஓராண்டு சந்தா, ஊரப்பாக்கம் எஸ்ஆர்எம் அசைவ உணவக உரிமையாளர் ஆர்.இரவிச்சந்திரன் ஓராண்டு சந்தா, கூடுவாஞ்சேரி பகுதியில் வசிக்கும் முற்போக்கு சிந்தனையாளரும், பெரியார் பற்றாளருமான தோழர் முத்துக்குமாரின் சகோதரர்  பாளையங்கோட்டை கபில்தேவ் ஓராண்டு சந்தா, கூடுவாஞ்சேரி இளங்கோவன் காளிமுத்து ஓராண்டு சந்தா வழங்கினர். (17.7.2022)
-----------------
கும்மிடிப்பூண்டி மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு பணி
கும்மிடிப்பூண்டி மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் பொன்னேரி நகர கழகம் சார்பில் விடுதலை 60 ஆயிரம் சந்தா சேர்ப்பு நிகழ்வு அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் நகர தலைவர் வே.அருள் தலைமையில் நடைபெற்றது. உடன் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் கெ.முருகன், பொன்னேரி நகர செயலாளர் மு.சுதாகர், பொன்னேரி இளைஞரணி அமைப்பாளர் க.சுகன்ராஜ், இளைஞரணி க.கார்த்திகேயன் ஆகியோர் இருந்தனர். சந்தா வழங்கியவர்கள் விவரம்:  மோகன்ராஜ் தி.மு.க மீஞ்சூர் நகர செயலாளர் - 5 ஓராண்டு சந்தா,  சூரியாபேரவை மா.த- ஓராண்டு, செந்தில்குமார்- அ.தி.மு.க நகராட்சி உறுப்பினர்- ஓராண்டு, வேலா கதிரவன் தி.மு.க நகராட்சி உறுப்பினர்- ஓராண்டு, செல்வகுமார் அ.தி.மு.க பொன்னேரி நகர செயலாளர் - ஓராண்டு, கதிரேசன் சி.அய்.டி.யு - அரையாண்டு, தமிழ்ச்செல்வன் மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் - அரையாண்டு, மதன் - மதன் டிரேடர்ஸ் - அரையாண்டு, புனிதராஜ் - பொன்னேரி - அரையாண்டு, வினோத் - வி.சி.க - அரையாண்டு சந்தா வழங்கினர்.







No comments:

Post a Comment