பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தின் சார்பாக நூல் திறனாய்வுக் கூட்டம் 15.07.2022 மாலை 6.30 முதல் 8.00 வரை இணையவழிக் கூட்டமாக நடந்தது.
நிகழ்வுக்கு பகுத்தறிவு எழுத்தா ளர் மன்றத்தின் துணைத்தலைவர் பாவலர் சுப.முருகானந்தம் தலைமை தாங்கி உரையாற்றினார்.பகுத்தறிவு கலைப்பிரிவின் மாநிலச் செயலாளர் மாரி.கருணாநிதி அனைவரையும் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழ கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு ஊடகப் பிரிவின் தலைவர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவு ஆசிரியர் அணியின் தலைவர் தமிழ் பிரபாகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலை வர் முனைவர் வா.நேரு தனது தொடக்க உரையில்,
இன்று பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் என்பதைக் குறிப்பிட்டு தமிழர்களின் இரட்சகர் காமராசர் அவர்கள் பற்றியும், பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத்தலைவர் இன்று நூல் திறனாய்வு செய்யப்படும் சிறுகதை தொகுப்பான 'நெஞ்சினில் கலந்தாய்' என்னும் நூலின் ஆசிரியர் கோ.ஒளிவண்ணன் பற்றியும், நூல் திற னாய்வு செய்ய இருக்கும் எழுத்தாளர் அர்ஷா மனோகரன் பற்றியும் அறிமுகம் செய்து உரையாற்றினார்.
கோ.ஒளிவண்ணன் தந்தையார் எம்ரால்டு கோபாலகிருஷ்ணன் அவர்கள் மிகச்சிறந்த பகுத்தறிவாளர். மருத்துவமனையில் இருக்கும் போது கூட, மருத்துவர் நாங்கள் முடிந்ததை செய்து விட்டோம், இனி உங்கள் உயிர் கடவுளின் கைகளில் தான் இருக்கிறது என்று குறிப்பிட்ட போது, 'அப்போ, மருத்துவமனை பில்லை கடவுளுக்கு அனுப்பிவிடவா?" எனக் கேட்டவர்.
பகுத்தறிவு நூல்களை அச்சிட்டவர்
பதிப்பகம் வைத்து பல பகுத்தறிவு நூல்களை அச்சிட்டவர்.அவரின் வழியில் மிகச்சிறந்த,வெற்றிகரமான பதிப்பாளராக திகழ்பவர் கோ.ஒளி வண்ணன் ஆங்கிலத்தில், தமிழில் மேடையில் பேசக்கூடியவர். பல கல்லூரிகள், பள்ளிகள், கருத்தரங் குகள் என அவர் ஆற்றியிருக்கும் உரைகள் நூற்றுக்கணக்கானவை.
ரோட்டரி சங்கத்தில் உயர்ந்த பொறுப்பான ஆளுநராக இருந்தவர். சென்னை வெள்ளம், இப்போது கரோனா காலம் போன்றவைகளில், மக்களின் பங்களிப்பாக பெரும் நிதியை வசூலித்து மக்களுக்கு உதவிகள் செய்தவர்.
இப்போதும் இலங்கைக்கு கூட நிதி திரட்டி உதவிகள் செய்து கொண் டிருப்பவர்.
பல வெளி நாடுகளுக்கு சென்று வந்தவர். மேடையில் பேசலாம் வாங்க உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர்.
சிறுவயதிலிருந்து தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை வாசிக்கும் வழக் கம் உள்ளவர். கரோனா காலத்தில் , வீட்டிற்குள் முடங்கியிருந்த நிலை யில், எதிர்மறை காலத்தையே நேர் மறை காலமாக மாற்றும் மனப் பான்மையில் சிறுகதைகள் எழுதத் தொடங்கியவர்.
'நெஞ்சினில் கலந்தாய்!'
கோ.ஒளிவண்ணன் சிறுகதைகள் என்ற முதல் சிறுகதைத் தொகுப்பும், இன்றைக்கு திறனாய்வுக்கு எடுத் துக்கொள்ளப்பட்டுள்ள 'நெஞ்சினில் கலந்தாய்' என்னும் சிறுகதைத் தொகுப்பையும் இந்த இரண்டு ஆண்டுகளில் எழுதியுள்ளார்.
இன்றைய நூல் திறனாய்வு செய் யும் எழுத்தாளர் அர்ஷா மனோகரன் தமிழ் ஈழத்தில் பிறந்தவர். கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் ஆடை வடிவமைப்பாளராக இருப் பவர். மிக நுட்பமாக சிறுகதைகள் பற்றியும் தான் வாசிக்கும் நூல்கள் பற்றியும் திறனாய்வினை முகநூல் போன்ற தளங்களில் எழுதக்கூடியவர். நிறைய வாசிக்கும் பழக்கமும், வாசித்து எழுதியவர்களைப் பாராட் டும் குணமும் உடையவர் என்றும் வா.நேரு குறிப்பிட்டார்.
தொடர்ந்து தான் வாசித்த Ôநெஞ்சினில் கலந்தாய்Õ என்னும் நூல் பற்றியும், அதில் உள்ள சிறுகதைகள் பற்றியும் முன்னுரையாகக் கொடுத்த எழுத்தாளர் அர்ஷா மனோகரன் எழுத்தாளர் கோ.ஒளிவண்ணனிடம் நேர்முகம் போல ஒவ்வொரு சிறு கதையைப் பற்றியும் குறிப்பிட்டு விளக்கம் கேட்க அதற்கு ஒளிவண் ணன் அவர்கள் பதில் அளித்தார்.
நிகழ்வில் கலந்துகொண்ட கவிஞர் ரெஜினா சந்திரா உள்ளிட் டோரும் கேள்விகள் கேட்க ஒளி வண்ணன் பதில் அளித்தார்.
அந்த நூலில் உள்ள பல சிறு கதைகள் பற்றியும், அதை எப்படி எழுதினேன் என்பது பற்றியும், வெளி நாடுகள் சுற்றுப்பயணம் போன்றவை பல களங்களை சிறுகதையில் அமைப்பதற்கு உதவி புரிந்தது என் பதையும் ஒளிவண்ணன் குறிப் பிட்டார்.
நிகழ்வின் இறுதியில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத் தலைவர் கவிஞர் ம.கவிதா நிகழ் வைத் தொகுத்துக் கூறி நன்றியுரை யாற்றினார்.
No comments:
Post a Comment