கல்லூரி, பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்: காவல்துறை எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

கல்லூரி, பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்: காவல்துறை எச்சரிக்கை

சென்னை, ஜூலை 21 கல்லூரி, பள்ளி மாணவர்கள் வன்முறை யில் ஈடுபட்டாலோ, பொது மக்களுக்கு தொந்தரவு அளிக் கும் வகையில் நடந்து கொண் டாலோ தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் 18.7.2022 அன்று கல்லூரி மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாடியதாக தகவல்  கிடைத்ததை தொடர்ந்து காவலர்கள் விரைந்து சென்று அவர்களை கலைந்து செல்லும் படி அறிவுறுத்தினர். இந் நிலையில் கல்லூரி, பள்ளி மாண வர்கள் வன்முறையில் ஈடு பட்டாலோ, பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக் கையில், "கோடை விடுமுறைக்குப் பின்னர் சென்னை பெருநகரில் உள்ள அனைத்து கல்லூரி களிலும் 2ஆம் ஆண்டு மற்றும் 3ஆம் ஆண்டு வகுப்பு மாண வர்களுக்கான கல்லூரி 18ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரியில் பயிலும் மாண வர்கள் திரளாக சாலையில் நடந்து சென்றபோது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர், மாணவர்களை கலைந்து செல்லும்படியும், கல்லூரிக்குள் விரைந்து செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைத்தனர். கல்லூரிக்கு சற்று தொலை வில் நடந்து சென்ற மாண வர்களை அவ்வழியே வந்த பேருந்தில் ஏற்றி கல் லூரிக்கு செல்லும்படி அனுப்பி வைத் தனர். இதனால் எந்தவித அசம்பாவித சம்பவமும், ரகளையும் நடைபெறவில்லை. மேலும், பொதுமக்களுக்கு எவ் வித பாதிப்பையும், போக்கு வரத்து நெரிசலையும் ஏற்படுத்த வில்லை என தெரியவந்தது.

எனினும், இக்கல்லூரிக்கு வெளியே காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டும், காவல் துறையி னர் பணியமர்த்தப்பட்டும், கண்காணித்தும் வருகின்றனர். இதே போல, அனைத்து கல் லூரிகளுக்கும் பேருந்து வழித் தடங்களிலும் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் யாரேனும் வன்முறையில் ஈடுபட்டாலோ, பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப் படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கல்வியில் தங்களது முழுக்கவனத்தை செலுத்தி, நன்கு படித்து, வாழ் வில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment