காற்று மாசை உறிஞ்சும் பாறாங்கல் பொடி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

காற்று மாசை உறிஞ்சும் பாறாங்கல் பொடி!

விவசாய நிலங்களை, கார்பன் டையாக்சைடினை உறிஞ்சும் களங்களாக மாற்றலாம்! இங்கிலாந்தின் ஷெப்பீல்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுப்படி, பாறைகளை பொடியாக்கி, விளை நிலங்களின் மீது தூவுவது, நல்ல தொடர் விளைவுகளை ஏற்படுத்தும்.

காற்றிலுள்ள கார்பன்டையாக்சைடு தோய்ந்த மழை நீர், பாறைப் பொடி கலந்த மண் மீது விழும்போது, வேதி வினை நிகழும். இதனால் மண் துகள்கள் நாள்படக் கரைந்து பைகார்பனேட்டாக மாறும். பைகார்பனேட் கலந்த மண் மிக வேகமாக காற்றிலுள்ள கார்பன்டையாக்சைடை உறிஞ்சிக்கொள்ளும். மேலும், இது விளை நில மண்ணில் சத்துக்களை அதிகரிக்கும். விளைநிலங்களிலிருந்து, மழை நீர் கிளம்பி, நதியில் சேர்ந்து, இறுதியில் கடலில் கலக்கும்போது, அத்துடன் ஏராளமான கார்பன்டையாக்சைடும் செல்லும். இது கடலில் அதிகரித்து வரும் அமிலத் தன்மையை கணிசமாகக் குறைக்கும்.பாறைகளை பொடியாக்கி விளை நிலத்தில் உரம் போலப் போடுவதை, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கடைபிடித்தாலே பல்லாயிரம் டன் கார்பன்டையாக்சைடினை காற்றிலிருந்து அகற்ற முடியும் என ஷெப்பீல்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment