21.6.2022 'வாழ்வியல் சிந்தனைகள்' சகிப்புத் தன்மை - ஓர் உயர்த்தும் ஏணி!
கடும் எதிரிகள்கூட நம் இல்லம் தேடி வருகின்றார்கள். ஏதோ ஒரு உதவியை நாடியே!
அவரை மன ஒதுக்கீடு இன்றி அன்புடன் வரவேற்பது உயர் தனிப் பண்பு ஆகும். தவறல்ல! இதனால் நாம் தாழ்ந்துவிட மாட்டோம். மாறாக உயர்த்தப்படும் மனிதராக சமூகத்தின்முன்...
உண்மை! உண்மை! மறுக்க முடியாத உண்மை நடைபெற்ற நிகழ்வு.
பெரிய குளத்தில் நகர்வு புத்தக சந்தை மூன்று நாட்கள் நாங்கள் கடைவீதி மாரியம்மன் கோவில் முன்பாக பெரிய அளவில் பந்தல் போட்டு நகர முக் கிய பிரமுகர்களை அழைத்து முதல் நாள் விற்பனை சிறப்பாக நடைபெற்றபோது காவல் துறையில் இருந்து எனக்கு அழைப்பு உடனடியாக காவல்நிலையம் வருக தங்கள் மீது புகார் உள்ளது என.
உடன் நான் காவல் நிலையம் சென்றேன். இரண்டு நபர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு நடுவே அமர்ந்து அவர்களை நலம் விசாரிக்கும் போது.
காவல் அதிகாரி - அய்யா உங்கள்மீது புகார் கொடுத்தவர்களே அவர்கள்தான். அவர்களிடம் இயல்பாக பேசுகிறீர்கள் என கூறினார். விசயம் என்ன என்று கேட்டபோது - எங்க மாரியம்மன் கோவிலை மறைத்து சாமியானா பந்தல் போட்டுள்ளது. சாமி கும்பிட வருபவர்களுக்கு இடையூறாக உள்ளது பக்தர்கள் மனம் புண்படுகிறது - இடத்தை மாற்றி வேறு இடத்தில் போடக் கூறினார்கள்.
உங்களுக்கு மாரியம்மன் கோவில் மட்டும்தான் சொந்தம் எங்களுக்கு இந்த ஊரே சொந்தம் - வேறு இடத்தில் போட்டுக் கொள்கிறோம். செலவை நீங்கள் தான் தர வேண்டும் என கூறினோம். காவல்துறையினரும் அதுதான் சரி என கூறினர் அவர்களோ, முடியாது என்றனர்.
காவல்துறையில் முறையாக அனுமதி பெற்று தான் நாங்கள் நிகழ்ச்சி நடத்துகிறோம் என கூறி - சரி என காந்தி சிலை அருகில் பந்தல் போட்டு நடத்தினோம் (விடுதலை செய்தி பக்தர்கள் சலசலப்பை மீறி - சிறப்பாக நடைபெற்ற புத்தக சந்தை).
செய்தியும் நாளிதழ்களில் வர பரபரப்பாக விற்பனை செய்தோம். இரண்டு நாட்கள் கழித்து காலை எங்கள் கடை முன்பு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தவர் கூனிக் குறுகி கை கட்டி பணிவாக நிற்கிறார் - நான் உடனே தம்பி இங்கே வாங்க என்ன பிரச்சினை, உட்காருங்க என்றவுடன், அய்யா மன்னிச்சுடுங்க! என்றார் அதெல்லாம் வேணாம் என்ன? என்றவுடன் -
அய்யா திராவிடர் கழக பொது மயான ரதம் வேண்டும் - எங்க தாத்தா இறந்து விட்டார் எங்கள் சமூக ரதம் ரிப்பேர் உங்க ரதம் வேண்டும் என்றார் - உடன் நான் அவருக்கு ஆறுதல் கூறி ரதத்தை கொடுத்து அனுப்பினேன்.
அன்று முதல் இன்று வரை அந்த நண்பர் எங்கு பார்த்தாலும் எனக்கும் கழகத்திற்கும் மரியாதை செய்கிறார் -
"சகிப்புத் தன்மை" ஒவ்வொரு தோழர்களும் கடைப்பிடிக்க வேண்டிய அற்புதமான மருந்து வளர்க வாழ்வியல் சிந்தனைகள்.
- மு.அன்புக்கரசன், பெரியகுளம்
No comments:
Post a Comment