செஸ் ஒலிம்பியாட் போட்டி : ஜூலை 20ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

செஸ் ஒலிம்பியாட் போட்டி : ஜூலை 20ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவு

சென்னை, ஜூலை 13   மாமல்ல புரத்தில் வரும் 28ஆம்தேதி நடக்கவுள்ள 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட் டம் நடந்தது. பணிகளை வரும் 20ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி, ஃபோர்பாயின்ட்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் வரும் 28ஆம் முதல் ஆகஸ்ட்10ஆம் தேதி வரை நடக்க உள்ளது.இதில், 187 நாடுகளைச் சேர்ந்த2,500 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டிக்காக உலக தரத்தில், 52 ஆயிரம் சதுர அடிபரப் பில் நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், ஏற்கெனவே உள்ள 22 ஆயிரம் சதுரஅடி பரப்பிலான அரங்கம் நவீனப்படுத்தப்படுகிறது.

இதில் மொத்தம் 700 செஸ் போர்டு மேஜைகள் அமைக்கப்பட உள்ளன. இதேபோல, விடுதி யின்அருகே வீரர்கள் மற்றும் பார்வை யாளர்களின் வாகனங்களை நிறுத்த, 8 ஏக்கர் பரப்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக ஃபோர் பாய்ன்ட்ஸ் விடுதியில், முதலமைச் சர்மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடந்தது.

அப்போது, செஸ் போட்டி தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைத்து, விளையாட்டு வீரர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். போட்டியை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில், அரங்குகளில் டிஜிட்டல் போர்டுகள் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர்அறிவுறுத்தினார்.

மேலும், பணிகளை விரைந்து மேற் கொண்டு, வரும் 20ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல மைச்சர்உத்தரவிட்டார்.

முன்னதாக, செஸ் போட்டி நடைபெற உள்ள அரங்கம், வாகன நிறுத்துமிடங்களில் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர்ஆய்வு செய்த பின்னர், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், முதலமைச்சர்பணி களைப் பார்வையிடாமல், நேரடி யாக ஆய்வுக் கூட்டத்தில் பங் கேற்றார். திடீர் உடல் நலக் குறைவுகாரணமாக, நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment