காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தல் பெரும்பாலான இடங்களில் திமுகவினர் வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தல் பெரும்பாலான இடங்களில் திமுகவினர் வெற்றி

காஞ்சிபுரம், ஜூலை 13  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 9ஆம் தேதி நடந்து முடிந்த 15 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவி உட்பட பெரும்பா லான இடங்களை திமுகவினர் கைப்பற்றினர்.

தமிழகம் முழுவதும் காலியாக இருந்த ஊரக உள்ளாட்சி பதவி களுக்கான இடைத்தேர்தல் கடந்த 9ஆம் தேதி நடந்தது. இதில் ஏராள மானோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். பலர் வேட்பு மனுக்களை  கணிசமான பதவி களுக்கு போட்டியின்றி உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்றுதொடங்கி வெற்றி பெற்றவர் களின் விவரம் அறிவிக்கப்பட்டது.

ஊராட்சி உறுப்பினர் பதவி களுக்கு கட்சி சின்னம் ஒதுக்கப் படாது என்பதால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் சுயேச்சை சின்னங்கள் ஒதுக்கப் பட்டன. இதில்திமுக மற்றும் அதிமுக ஆதரவாளர்களிடம் கடும் போட்டி நிலவியது.இதில் பெரும் பாலான இடங்களில் திமுகவினர் வெற்றி பெற்றனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி 36ஆவது வார்டில்  திமுக சார்பில் போட்டியிட்ட கு.சுப்புராயன் 1,759 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  

இதேபோல் உத்திரமேரூர் ஒன் றியம், அனுமந்தண்டலம் ஊராட்சி 6ஆவது வார்டில் மு.ஹரிதாஸும் கருவேப்பம்பூண்டி ஊராட்சி 3ஆவது வார்டில் சசியும் சிறீபெரும் புதூர் ஒன்றியம் சிவபுரம் ஊராட்சி 5ஆவதுவார்டில் நீ.மகேஸ்வரியும் உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த இடைத்தேர்தலில் மதுராந் தகம் ஊராட்சி ஒன்றியம் 15ஆவது வார்டில் அதிமுக ஆதரவாளர் 1,433 வாக்குகளும் திமுக ஆதரவாளர் 1,430 வாக்குகளும் பெற்றனர். இதில் 3 வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவின் யோகசுந்தரி வெற்றி பெற்றார்.

இதேபோல் காட்டாங் கொளத் தூர் ஒன்றியம் திம்மாவரம் ஊராட்சி 4ஆவது வார்டில் கே .வேணி 368 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

புனிததோமையர் மலை ஒன்றியம் திரிசூலம் ஊராட்சி 1ஆவது வார்டில் 546 வாக்குகள் பெற்று மாரிமுத்துவும் நன்மங்கலம் ஊராட்சி 1ஆவதுவார்டில் 482 வாக்குகள் பெற்று பாலாஜியும் வெற்றி பெற்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு ஒன்றிய 1ஆவது வார்டு உறுப்பினர் தேர்தலில் ச.கி.சேகர் வெற்றி பெற்றார். பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு ச.ச.பிரதீப் அசோக்குமார் வெற்றிபெற்றார். 

பூவிருந்தவல்லி ஒன்றியம் அகர மேல் ஊராட்சியின் 3ஆவது வார்டுஉறுப்பினராக கி.ராமச்சந் திரன், மீஞ்சூர் ஒன்றியம் மெதூர் ஊராட்சியின் 3ஆவது வார்டு உறுப் பினராக ச.சீதாராமன், சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி 8ஆவது வார்டு உறுப்பினராக கோ.செல்வன் ஆ கியோர் வெற்றி பெற்றனர்.

No comments:

Post a Comment