கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பாரத மாதா புத்திரர்கள் 4 கோடி பேர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 24, 2022

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பாரத மாதா புத்திரர்கள் 4 கோடி பேர்

புதுடில்லி, ஜூலை 24 நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான தகுதியிருந்தும் 4 கோடி பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசிகூட போடாமல் இருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரி வித்துள்ளது.

இதுகுறித்து, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிர வீண் பவர் எழுத்து பூர்வமாக பதில ளித்தார்

அதில், ‘ஜூலை 18-ஆம் தேதி நிலவரப்படி, அரசின் கரோனா தடுப்பூசி மய்யங்கள் மூலம் சுமார் 178 கோடி (97.34%) தடுப்பூசி தவணைகள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளன. இந்த தேதி வரையில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் தகுதியிருந்தும் 4 கோடி பயனாளர்கள் இன்னும் முதல் தவணை தடுப்பூசிகூட செலுத்திக் கொள்ளவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பணியாளர்கள், முன் களப் பணியாளர்கள், 60 வயதை கடந்த பயனாளர்கள் ஆகியோருக்கு அரசின் கரோனா தடுப்பூசி மய்யங் களில் இலவசமாக முன்னெச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்தும் பணி கடந்த மார்ச் 16-ஆம் தேதி தொடங் கப்பட்டது. 18 முதல் 59 வயதுடைய வர்களுக்கு தனியார் மருத்துவ மனைகளில் உள்ள தடுப்பூசி மய்யங் களில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கை தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில், 18 வயதுக்கு மேற் பட்ட அனைத்து பயனாளர்களுக்கும் அரசு தடுப்பூசி மய்யங்களில் 75 நாள் களுக்கு இலவசமாக முன்னெச்ச ரிக்கை தடுப்பூசி செலுத்தும் சிறப்பு நடவடிக்கை கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. இதனிடையே, ஒன்றிய அரசு ஊழியர்களும் அவர்களது குடும் பத்தினரும் கரோனா முன்னெச் சரிக்கை தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ள வசதியாக, பணி யிடங்களில் முகாம்களை நடத்துமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளது. இதுதொடர் பான உத்தரவை அனைத்துத் துறை களுக்கும் ஒன்றிய பணியாளர் நலத் துறை அனுப்பியுள்ளது.



No comments:

Post a Comment