காஷ்மீரில் ‘370’ ரத்துக்குப் பிறகும் 246 பேர் படுகொலை ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 24, 2022

காஷ்மீரில் ‘370’ ரத்துக்குப் பிறகும் 246 பேர் படுகொலை ஏன்?

புதுடில்லி, ஜூலை 24  ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு உரிமை வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னரும், அங்கு பொதுமக்களில் 118 பேரும், பாதுகாப்புப் படைத் தரப்பில் 128 பேரும் பயங்கரவாதிகளின் தாக்கு தல்களில் உயிரிழந்துள்ளனர் என்று ஒன்றிய பாஜக அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு உரிமை வழங்கும் சட்டப்பிரிவுகள் ‘370’ மற்றும் ‘35ஏ’ ஆகியவற்றை, ஒன்றிய பாஜக அரசானது, கடந்த 2019 ஆகஸ்ட் 5 அன்று ரத்து செய்தது. 

மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம்,  

2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட் டது. ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாதிகளிடம் புகலிடமாக இருப்பதற்கு அம்மாநிலத் திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமை களே காரணம் என்றும், அவற்றை ரத்து செய்வதன் மூலம் இனி காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க முடியும் என்று மோடி அரசு காரணம் கூறியது. ஆனால், சிறப்பு உரிமை ரத்துக்குப் பிறகும் ஜம்மு - காஷ்மீரில்  பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர் பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநி லங்களவையில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், “ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு அரசுத் துறைகளில் 5 ஆயிரத்து 502 காஷ்மீர் பண்டிட்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2019 ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு அங்கி ருந்து பண்டிட்கள் யாரும் வெளியேற வில்லை. கடந்த சில ஆண்டுகளாக காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளன. 2018-இல் 417 பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்த் தப்பட்ட நிலையில், 2021-இல் 229-ஆக குறைந்துவிட்டது. 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதியில் இருந்து இப்போது வரை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாது காப்புப் படையினர் 128 பேரும், பொது மக்களில் 118 பேரும் உயிரிழந்துவிட்டனர். கொல்லப்பட்ட பொதுமக்களில் 5 பேர் காஷ்மீர் பண்டிட்கள், 16 பேர் இந்து மதத்தின் பிற பிரிவினர் மற்றும் சீக்கி யர்கள்” என்று தெரிவித்துள்ளார். “புனித யாத்திரை வந்தவர்களை பயங் கரவாதிகள் நெருங்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு இருப்பதால் அவர்கள்மீது தாக்குதல் நடத்துவது போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. பயங்கரவாதத்தை எவ் விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற ஒன்றிய அரசின் உறுதியான நிலைப்பாட்டால் காஷ்மீரில் நிலைமை மேம்பட்டு வருகிறது” எனவும் நித் யானந்த் ராய் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment