மத்தியப் பிரதேச மாநில மாநகராட்சித் தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 24, 2022

மத்தியப் பிரதேச மாநில மாநகராட்சித் தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி

போபால், ஜூலை 24 மத்தியப் பிரதேசத் தில் அண்மையில் நடந்து  முடிந்த மாநகராட்சித் தேர்தலில் முந்தைய தேர்தலைக் காட்டிலும் குறைவான இடங்களே பாஜக-வுக்கு கிடைத்துள் ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாநகராட்சிகளுக்கான தேர்தல் அண் மையில் 2 கட்டங்களாக நடந்து முடிந்து  வாக்குகள் எண்ணப் பட்டன. இதில் மொத்தமுள்ள 16 மாநகராட்சி மேயர் பதவிகளில் 9 இடங்கள் மட்டுமே பாஜக வுக்கு கிடைத்துள்ளது. 

கடந்த 2014- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 16 மேயர் பதவிகளையும் பாஜக-வே கைப்பற்றி அபார வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இம்முறை 7 மேயர் பதவிகளை இழந்துள்ளது. 5 மேயர் பதவிகளை காங்கிரஸ்  கட்சி கைப்பற்றியுள்ளது. ஒரு இடத்தில் ஆம்  ஆத்மி கட்சியும், மற்றொரு இடத்தில் பாஜக- விலிருந்து பிரிந்து சென்று சுயேட்சையாக போட்டியிட்ட வேட் பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சியிலும், பாஜக மாநிலத் தலைவர் வி.டி. சர்மாவின் சொந்த மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

மத்திய பிரதேச மாநகராட்சித் தேர்தலில்  கடந்த 20 ஆண்டுகளில் பாஜக-வின் மிக மோச மான தோல் வியாக இது பார்க்கப்படுகிறது. கடந்த 1999, 2004 மாநகராட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வென்றது.  கடந்த 2009 ஆம் ஆண்டும் 3 மேயர் இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. அதன்படி கடந்த 23 ஆண்டுகளில் காங்கிரஸின் சிறப் பான செயல்பாடாக இது கருதப்படு கிறது. புர்ஹான்பூர் மேயர் பதவிக்கு போட்டி யிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷனாஸ் இஸ்மாயில், பாஜக வேட் பாளர் மாதுரி படேலிடம் வெறும் 388 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி யடை ந்தார். ஆனால், இங்கு அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி வேட்பாளர் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக் குகளை பெற்றார். ஒவைசி கட்சி வாக் குகளைப் பிரித்ததால் பாஜக வெற்றி பெற்றது.


No comments:

Post a Comment