ஓசூர் புத்தகத் திருவிழா: 3 லட்சம் பார்வையாளர்கள், ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

ஓசூர் புத்தகத் திருவிழா: 3 லட்சம் பார்வையாளர்கள், ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

ஓசூர், ஜூலை 21- ஓசூரில் ரூ.1 கோடி மதிப்புள்ள புத்தகங் கள் விற்பனை மற்றும் சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் உட் பட 3 லட்சம் பார்வையாளர் கள், 500 வாசகர்கள் விழிக் கொடை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் மாநில அர சின் உதவியுடன் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வந்த 11ஆவது புத்தகத் திரு விழா நிறைவடைந்தது.

ஓசூர் நகரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் உள்ள ஹில்ஸ் ஓட்டல் அரங்கில் கடந்த 8ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை 12 நாட்களாக நடைபெற்று வந்த இந்த 11ஆவது புத்தகத் திருவிழா நிறைவு பெற்றது.

புத்தகத் திருவிழாவின் இறுதி நாளன்று புத்தக அரங்குகளை பார்வையிட அரசு மற்றும் தனியார் பள்ளி களில் பயிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் இலவசப் பேருந்துகளில் அழைத்துவரப்பட்டனர்.

அனைத்து மாணவர்களும் வரிசையில் சென்று புத்தகங் களை பார்வையிட்டு தங்க ளுக்கு பிடித்தமான புத்தகங் களை வாங்கிச் சென்றனர். மேலும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த கோள ரங்கத்தை நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகத்துடன் பார்வையிட்டனர். 

இந்த ஓசூர் புத்தகத் திருவிழாவில் 100 ஸ்டால்கள் அமைக்கப் பட்டு முன்னணி பதிப்பகங்க ளின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட் டிருந்தன.

இந்தப் புத்தகத் திருவிழா வில் ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் சார்பில் விழிக்கொடை விழிப்புணர்வு முகாம் அமைக் கப்பட்டு, புத்தகங்களை பார் வையிட வருகை தந்த பொது மக்களிடையே விழிக்கொடை குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து புத்த கத் திருவிழாவுக்கு வருகை தந்த பிரபல சொற்பொழிவா ளர் நாஞ்சில் சம்பத், பட்டி மன்ற பேச்சாளர் கவிதா ஜவ ஹர் உட்பட 500-க்கும் மேற் பட்டவர்கள் விழிக்கொடை வழங்குவதாக உறுதி மொழி அளித்ததை தொடர்ந்து, அவர் களுக்கு மேக்னம் அரிமா சங்க தலைவர் அண்ணாமலை, செயலாளர் (சேவைதிட்டம்) ரவிசங்கர் ஆகியோர் விழிக் கொடை உறுதி மொழி அட் டைகளை வழங்கி பாராட்டினர்.

மேலும், இந்தப் புத்தகத் திருவிழாவில் மாவட்ட பள்ளிக்  கல்வித் துறை சார்பில் அமைக் கப்பட்டிருந்த தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இல்லம் தேடிக் கல்வி அரங்கை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் பார் வையிட்டு பயனடைந்தனர்.

No comments:

Post a Comment