கீழடி அகழாய்வு: சுடுமண் உறைகிணற்றின் 2 அடுக்குகள் வெளியே தெரிந்தன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

கீழடி அகழாய்வு: சுடுமண் உறைகிணற்றின் 2 அடுக்குகள் வெளியே தெரிந்தன

திருப்புவனம், ஜூலை 21  கீழடி அகழாய்வின்போது சுடுமண் உறைகிணற்றின் 2 அடுக்குகள் வெளியே தெரிந்தன. 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8ஆம் கட்ட அகழ் வாராய்ச்சி பணி நடந்து வருகிறது.. இப்பணிகள் கீழடி மட்டுமின்றி அருகே உள்ள கொந்தகை, அகரம் ஆகிய பகு திகளிலும் நடைபெறுகிறது. இதில் கீழடியில் 8ஆவது குழி தோண்டப்பட்டதில் சுவர் போன்ற செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது 9ஆவது குழி தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

 இதற்கிடையே 8ஆவது குழியில் செங்கல் சுவர் கண்ட றியப்பட்ட இடத்தின் அருகே ஆழமாக தோண்டியதில் சுடு மண் உறைகிணறு தென்பட் டது. மிகவும் நேர்த்தியாகவும், வட்டவடிவமாகவும் அந்த உறைகிணறு இருந்தது. ஆனால், அந்த உறைகிணறு எவ்வளவு உயரம் கொண்டது? அதன் அடிப்பகுதி எவ்வாறு இருக்கும்? என்பதை அறிய ஆழமாக தோண்டினார்கள். தற்போது அந்த உறை கிண றின் 2 அடுக்குகள் வெளியே வந்துள்ளன. மேற்கொண்டு இன்னும் ஆழமாக தோண்டி னால் அந்த உறைகிணற்றின் அடுத்தடுத்த அடுக்குகளை காண முடியும் என தொல்லி யல் அதிகாரிகள், அலுவலர் கள் எதிர்பார்க்கிறார்கள்.

No comments:

Post a Comment